Tuesday, November 23, 2010

பூங்காற்று சூடாகும்வேளை!

நன்றி மீண்டும் வருக!

சார், நீங்க எங்கே போறீங்க? நான் உங்களை
சொல்லவில்லை; படத்தின் பெயர்தான் சார்
அது.

                    

இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் மற்றும்
சுஹாசினி இணைந்து நடித்துள்ளனர். இந்தப்
படத்தின் ஒரு ஸ்டில், சாவி இதழின் அட்டையில்
-அதாவது, முன் பின் இரு அட்டையிலும் வெளியானது.
பலபல வண்ண பலூன்களுக்கு  இடையே
பிரதாப் போத்தனும் சுஹாசினியும் சிரித்தபடி
இருக்கும் படம் அது. இப்போது பாடல்.

பாடல் 5:
பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
கா...தல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
நெஞ்சிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
நெஞ்சிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள்... ஹே...

பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு, ஹேய்
பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று...

எஸ். பி. பி., எஸ்.ஜானகி பாடினார்கள் என
எண்ணுகிறேன்.
இந்தப் பாடலை எழுதியவர் யார்? தெரியவில்லை!
பாடலுக்கு இசையமைத்தவர் யார்? தெரியவில்லை!
உங்களுக்குத் தெரியுமா?

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

Friday, November 19, 2010

பூவே நீ யார் சொல்லி யாருக்காக...

பூவே நீ யார் சொல்லி யாருக்காக...!!!




'ஒருதலை ராகம்' என்ற சூப்பர் ஹிட் படத்தைத்
தயாரித்த, தயாரிப்பாளர் (ஈ.எம்.இப்ராஹிம்),
அடுத்து தயாரித்த படம் 'தணியாத தாகம்.'
இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும்
எஸ்.ஜானகி ஆகியோர் பாடிய இந்தப் பாடல்
இனிமையான காதல் மெல்லிசை.

பாடல் 4 :
ஆண்:
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்?
நீ பருவத் தோட்டத்தின் புதுமலர்
நீ பருவத் தோட்டத்தின் புதுமலர்
என்னோட பாடிட வந்த மதுமலர்... மதுமலர்
(பூவே...)

பெண்:
நீ கோயில் கொண்ட அந்த கண்ணனுக்கோ?
நான் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ?
நீ கோயில் கொண்ட அந்த கண்ணனுக்கோ?
நான் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ?
ஆண்:
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பூவுடல் சிவக்கட்டும் என் கரம்பட்டு...
(பூவே...)

இந்தப் பாடலை எழுதியவர் யார்? தெரியவில்லை!
பாடலுக்கு இசையமைத்தவர் யார்? தெரியவில்லை!
உங்களுக்குத் தெரியுமா?

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

!

Monday, November 8, 2010

ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி...





நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கலை உலக நாயகன்
கமல்ஹாசனுக்கு இந்த கலையன்பனின் வாழ்த்துக்கள்!
இந்த இடுகை கமல்ஹாசன் பாடிய பாடல்.

பாடல் 3 : ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி...          
படம்: மரியா மை டார்லிங்
பாடியவர்: கமல்ஹாசன்

பாடல்:
ராசாத்தி உன்னப்  பார்க்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி
அடி ரதிதேவி...
அடி ரதிதேவி இன்னும் உனக்கு வெட்கம் என்னடி
முகத்தில் திரை போட்டு  மூடிக் கொண்டு   நாணம் என்னடி
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதிலேது - அட
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதிலேது
ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி

-நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா?
இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி! 


!

Sunday, November 7, 2010

நிலவென்னப் பேசுமோ?



அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

மனதை மயக்கும் திரை பாடல்களைப் பதியும் தளங்கள் பற்பல
இருக்கின்றன.அவற்றைப் படிக்கும்போதும் அதனுடன்
இணைத்துள்ள வீடியோவைக் கேட்கும்போதும்
எனக்கு சில பாடல்கள் நினைவுக்கு வரும். அவற்றை தேடித்  பார்ப்பேன். கிடைக்காமல்
விட்டுவிடுவேன்.

ஒரு கட்டத்தில் அவ்வாறான பாடல்களைப் பதிந்து,
நமது பதிவர்களிடமே அப்பாடல் பற்றிய விவரங்களைக்
கேட்டால் கொடுப்பார்களே என்ற எண்ணம்
தோன்றியதுமே இந்த வலைப்பூவை ஆரம்பித்துவிட்டேன்.
நிறைய பதிவர்கள் பார்த்து  , படித்து, பதிலிட வேண்டும் எண்ணத்தினால்தான் இந்தப் பதிவுகளை திரட்டிகளில் இணைக்கிறேன்.

இனி...

பாடல் 1 : நிலவென்னப் பேசுமோ?
---------------------------------------------------
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின்
இசையில் 'ஆறு புஷ்பங்கள்' படத்தில் இடம்பெற்ற
"ஏண்டி முத்தம்மா" என்ற பாடலைப் பாடிய இசையமைப்பாளர்
சந்திரபோஸ் அவர்கள் பாடியது இந்தப்  பாடல்.

பல்லவி:
நிலவென்னப் பேசுமோ?
இளம் காற்று வீசுமோ?
(இளம் காற்று வீசுதே - என்ற பாடல் நினைவு வருகின்றதா?)
விழியோடு   உறவாடும் மொழி என்ன மௌனமோ ?

சரணம் 1 :
குளிர்காலக் கோடையில்
கொதிக்கின்ற வாடையில்
தளிருக்கு தீ மூட்டும் நியாங்களோ?
கரை ஏறி வாருங்கள்-
இமை சிந்தும் பூக்களே
இரை தேடித் தேடி
இங்கு ஏமாற்றமோ
நிலவென்னப் பேசுமோ
இளம் காற்று வீசுமோ?
விழியோடு உறவாடும் மொழி என்ன மௌனமோ?

சரணம் 2 :
ஒளியில்லை கண்ணுக்குள்
உணர்வில்லை நெஞ்சுக்குள் ...

--இப்படி பாடல் தொடர்கிறது.
நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா? இப்பாடல் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.

பாடல் 2 : சிந்தனை தோன்றி
-------------------------------------------
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடியது. எழுதியவர்
கவிஞர் புரட்சிதாசன். படத்தின் தயாரிப்பாளரும்
அவர்தான் என்று நினைக்கிறேன். சிவாஜி நடித்த
'தராசு' படம் என்று நினைக்கிறேன்.

பாடல் :

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ
வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல

இந்த இரு பாடல்கள் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

நன்றி!

!
Related Posts Plugin for WordPress, Blogger...