Thursday, January 5, 2012

கையில வாங்கினேன் பையில போடல...

கையில வாங்கினேன் பையில போடல...



எல்லோரும் நல்லாயிருக்கீங்களா?

அம்மா பால் விலையை ஏத்திட்டாங்க.
அம்மா பஸ் கட்டணத்தை ஏத்திட்டாங்க.
அம்மா மின் கட்டணத்தை ஏத்தப் போறாங்க.
நம்ம எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்!(?)

உழைக்கும் வர்க்கத்தின் அன்றாட மனக் குமுறலை
இசையோடு எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பாடல் 17:

பல்லவி
கையில வாங்கினேன் பையில போடல - காசு
போன இடம் தெரியல
என் காதலி பாப்பா காரணம் கேட்பா
ஏது சொல்றது புரியல...
(கையில...)

சரணம் 1:
மாசம் முப்பது நாளும் உழைச்சி
வறுமை புடிச்சி உருவம் இளைச்சி
காச வாங்கினா கடங்காரனெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் - வந்து
எனக்கு உனக்குன்னு பிக்கிறான்
(கையில ...)

சரணம் 2:
கொத்து கொத்தா வேர்வை விட்டா....
பட்டினியாய் பாடுபட்டா....
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பெட்டியிலே - அது
குட்டியும போடுது வட்டியிலே
(கையில...) 

சரணம் 3:
விதவிதமா துணிகள் இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதை எதையோ வாங்கணுமின்னு - அண்ணே
எதை எதையோ வாங்கணுமின்னு
எண்ணம் இருக்கு வழியில்ல்லே - இதை
எண்ணாம இருக்கவும் முடியல்லே
(கையில...)

சரணம் 4:
கண்ணுக்கு அழகா பொண்ணப் படச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படச்சான்
ஒன்னுக்கு பாத்தா செல்வத்தப் படச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படச்சான்
என்னைப் போல பலரையும் படச்சி - அண்ணே
என்னைப் போல பலரையும் படச்சி
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படச்சான்?
(கையில...)



உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
உங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நன்றி!
.
Related Posts Plugin for WordPress, Blogger...