Saturday, March 23, 2013

ஓடக்கர மண்ணெடுத்து

"ஓடக்கர மண்ணெடுத்து"

" தஞ்சாவூரு மண்ணு எடுத்து" என்று  பொற்காலம்
படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
"ஓடக்கர மண்ணெடுத்து" என்று ஆரம்பிக்கும் பாடலைக்
கேட்டிருக்கிறீர்களா?
 


 "ஓடக்கர மண்ணெடுத்து" என்கிற இன்றைய பாடல்
மிக சோகமான பாடல் ஆகும். எஸ்.ஜானகியின்
உருக்கமான குரலில் பாடல் நம்மை ஆழ்மனதினுள்
சென்று உருக்கும் வல்லமையுள்ளது. 








பாடலைப் பார்ப்போம்.

பாடல் 18:

 பல்லவி:

ஓடக்கர மண்ணெடுத்து
ஒம் உருவம் செஞ்சி வச்சேன்
ஓடக்கர மண்ணெடுத்து
ஒம் உருவம் செஞ்சி வச்சேன்
ஓடையெல்லாம் தண்ணிவந்து
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன? ராசாவே
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன?
                                                                ( ஓடக்கர மண்ணெடுத்து...)

சரணம் 1:

மணப்பொருத்தம் பார்த்து வச்சேன்
மாலை ரெண்டும் வாங்கி வச்சேன்
ஊரார் கண்ணும் உறுத்தியதே - என் ராசாவே
ஊழ்வினையும் துரத்தியதே
                     (ஓடக்கர மண்ணெடுத்து......)



 சரணம் 2:

படுத்தா பல நெனவு
பாயெல்லாம் கண்ணீரு
ஹ்ஹ் ஹ்ஹ் ஹ்ஹ் (விம்மல்)
படுத்தா பல நெனவு
பாயெல்லாம் கண்ணீரு - என் ராசாவே
எடுத்துச் சொல்லா யாரிருக்காங்க?
என் ராசாவே.... எடுத்துச் சொல்லா யாரிருக்காங்க?
                         (ஓடக்கர மண்ணெடுத்து......)


இந்தப் பாடல், அனேகமாக இராம.நாராயணன் படத்தில்
அல்லது ஏ.எம்.காஜா படத்தில் இடம்பெற்றிருக்கலாம்
என்று நினைக்கிறேன்.

இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?
எந்தப் படத்தில்?
யார் இசையில்?
யாரின் வரிகளில்? -என்ற விவரங்கள் தெரிந்தால்
பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...