Sunday, July 28, 2013

பாட்டை மாத்துங்க கவிஞரையா! (2)

 
இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!


"அதான்டா இதான்டா
அருணாசலம் நாந்தான்டா"
-என்கிற பாடலைக் கேட்டிருப்பீர்கள்.(இந்தப் பாட்டு எந்தப் படத்தில்?)


சரணத்தில் இரு வரிகள் வரும்.
"மீன் செத்தாக் கருவாடு;
நீ செத்தா வெறும்கூடு;
கண்ணதாசன் சொன்னதப்பா!"


-இதில் வந்துள்ள இரண்டாவது வரியைப் பற்றி நான் கருத்து எதுவும் கூற(  விரும்ப)வில்லை.


ஆனால், "மீன் செத்தாக் கருவாடு" என்கிற வரியை மட்டும் பார்ப்போம்.
எங்கள் ஊர் பக்கம்லாம்  'மீன் செத்தா அப்பவும் அது (பேரு) மீன்' தான். உங்கள் ஊர்லலாம் அப்படித்தானே? இல்லை, வேறு மாதிரியா?


அந்த மீன் அல்லது எந்த மீனும் செத்ததும் அப்பவும் அது மீனுதான். பிறகு அந்த மீனை, வயிறு நடுவில்
கீறி, வயிற்றினுள் இருக்கும் குடல் மற்றும் அழுக்குகளை நீக்கிவிட்டு, நன்றாக உப்பு போட்டு, ஊறவைத்து,
பிறகு கொண்டுவந்து வெயிலில் போட்டு... அது காய, காய...
அப்புறம்தான் அது கருவாடு! சரிங்களா?


அதனால், கீழே வருகிற மாதிரி பாட்டை மாத்துங்க கவிஞரையா!


"மீன் காஞ்சா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு!"

-கலையன்பன்.


Saturday, July 20, 2013

பாட்டை மாத்துங்க கவிஞரையா! (1)

பாட்டை மாத்துங்க கவிஞரையா! (1)

'பாட்டை மாத்துங்க கவிஞரையா' என்கிற இந்தப் பதிவு சும்மா கிண்டல்,
கலாய்ப்புக்காக மட்டுமே; நோ சீரியஸ்!
இந்தப் பாட்டைக் கேட்டுருப்பீங்க:

"ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா!"

-அது எப்படி? ஓர் ஆண்டு முடிந்தால், வயதிலொன்று கூடுமா? அல்லது குறைந்து போகுமா?
ஒருவருக்கு 25 வயது என்று வைத்துக் கொண்டால், ஒர் ஆண்டு முடிந்ததும் 'வயதொன்று போய்'
அவரது வயது 24 ஆகிவிடுமா? பிறந்து ஓர் ஆண்டு நிறைவடைகின்ற குழந்தைக்கு, 365 நாட்கள்
முடிந்ததும் வயது போய் '0' வயது ஆகிவிடுமா?

 
அதனால் பாட்டை இப்படி மாத்துங்க கவிஞரே!

"ஆண்டொன்று போனால்
வயதொன்று கூடும்
அதற்கு முன்னாலே வா வா வா வா!"

அல்லது

"ஆண்டொன்று போனால்
வயதொன்று வருமே
அதற்கு முன்னாலே வா வா வா வா!"
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போமே!

-கலையன்பன்.

Sunday, July 7, 2013

தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்!

இன்றைய பாடல்: தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்!

பாடல் 20:
பல்லவி:

தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்
பாவத்துக்கு தண்ணி அடிச்சேன் - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா - இப்போ
நான் பாவத்துல மாட்டிக்கிட்டேன்டா
மதியும் போச்சுடா
நிம்மதியும் போச்சுடா
பாழும் மதுவக் குடிச்சி
மனசுகூட மிருகமாச்சுடா


சரணத்தில் வசனமாக வந்து பிறகு பாடல் தொடரும்.

என் தலைவன் குடிய தடுக்க சட்டம் போட்டும் முடியல - இப்போ
குடல் கருகி நடக்கக்கூட முடியல

இந்தப் பாடியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
அதனால் இசையமைப்பாளரும் அவரேதான் என எண்ணுகிறேன்.
பாடலின் படம், கவிஞர் யார் என்பது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...