Saturday, November 30, 2013

பாட்டு ஒற்றுமை - 6

Sri-divya-half-saree-Varutha-Padatha-Valibar-Sangham-movie


வேடன் படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
[எஸ்.பீ.பாலசுப்ரமணியம், எஸ்.சித்ரா பாடியது.]


"அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவே இப்ப என்ன பண்ணுவ?
கம்மா கரையில சும்மா நான் இருந்தா என்ன பண்ணுவ?
தப்பிக்க நினச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ?
நானும் குதிச்சா என்ன பண்ணுவ?"


இதே டைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னே ஒரு திரைப் பாடல் வந்துள்ளது. அது இதுதான்:

ஆண்: ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் நாடு சாமத்திலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் நாடு சாமத்திலே


பெண்: ஊரார் உறங்கும்போது உற்றாரும் தூங்கும்போது
நல்ல பாம்பு வேடங் கொண்டு நடுச்சாமம் நீ வந்தாயானால்
ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் பறந்திடுவேனே

ஆண்: ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் நீ பறந்தாயானால்
ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் நீ பறந்தாயானால்
செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்

பெண்: செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
பூமியைத் தேடியல்லோ புல்லாய் முளைத்திடுவேன்

ஆண்: பூமியைத் தேடியல்லோ புல்லாய் நீ  முளைத்தாயானால்
பூமியைத் தேடியல்லோ புல்லாய் நீ  முளைத்தாயானால்
காராம்பசு வேடங் கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை

பெண்: காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
ஆல மரத்தடியில் அரளிச் செடி ஆவேன்
ஆல மரத்தடியில் அரளிச் செடி ஆவேன்

ஆண்: ஆல மரமுறங்க அடி மரத்தில் நீ உறங்க
உன் மடியில் நான் உறங்க என்ன தவம்செய்தேனோ?

ஆண் + பெண்: ஆஆஅ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ...... 

இந்த சுவை மிகுந்த பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்,
கவிஞர், பாடகர்கள் பெயர்கள் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.


இந்த இரு பாடல்களையும்  ஒப்பிட்டுப் பார்த்து ரசித்தீர்களா?
நன்றி!

 
- கலையன்பன்.
***உங்கள் கருத்துரைகளை வழங்குங்கள் நண்பர்களே!*** 

Friday, November 1, 2013

பாட்டு ஒற்றுமை - 5

தீப ஒளி வாழ்த்துக்கள்!!! 

பல திரைப்படங்களில் நிறைய   கவிஞர்கள் காதலியை வர்ணித்து பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.  அவர்கள் காதலியின் முகத்தையும் குறிப்பாக அவர்களின் கண்களையும் வர்ணித்து எழுதியிருக்கிறார்கள்.
பின் வரும் சில பாடல்களைப் பாருங்கள்.

1. கண்களும் கவிபாடுதே... (படம்: அடுத்தவீட்டுப் பெண்.)

2. கண்ணாலே பண்பாடும் உன்னாலே  வாழ்விலே   இன்பம் கொண்டாடுவேன்.

3. கலையே உன் விழிகூட கவி பாடுதே! தங்கச்
சிலையே உன் நிழல்கூட ஒளிவீசுதே!


ஆக, காதலியை வர்ணிப்பதென்றால், அவளுடைய கண்களை
மட்டுமல்லாது, அந்தக் கண்கள் 'கவி பாடுது' என்றும்
'பண் பாடுது' என்றும் கவிஞர்கள் பாடலை எழுதிவிடுகிறார்கள்.
இன்னும் சில கவிஞர்கள் எழுதும் பாடலில் அந்தக்
கண்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்பதையும் பாருங்கள்.

1. கண்களின் வார்த்தைகள் புரியாதோ?

2. கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே

3. பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா?

4. விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே 

ஒவ்வொரு கவிஞரும் தத்தமது கற்பனையைக் கொண்டு
ராகத்திற்கு ஏற்றபடி வேறு வேறு வார்த்தைகளில்
தந்துள்ளது ரசிக்கும்படி இருக்கின்றதல்லவா?

கவிஞர்களின் பெயர்களையும் தெரிந்தால்
கூறுங்களேன்.

-கலையன்பன்.
                                                         

                                                                
                                                                         

***உங்கள் கருத்துரைகளை வழங்குங்கள் நண்பர்களே!*** 




Related Posts Plugin for WordPress, Blogger...