Sunday, March 6, 2011

'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது'

இன்றைய பாடல் டீ.எம்.எஸ். அவர்கள் பாடிய
'வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது' என்கிற
பாடல்!





பாடல் 16 :

வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது
சிவப்பு யானை பல்லாக்க தூக்குது   
இவள் மருமகளாம் அவள் மாமியாராம்
இதில் இடையினிலே அவன் சாமியாரம்
வெள்ளக் காக்கா மல்லாகப் பறக்குது
சிவப்பு யானை பல்லாக்க தூக்குது   

சரணம் 1 :
கடக்காரன் தராசுல கல்லக்  காணோம்
கடிகார நடுவுல முள்ளக் காணோம்
கடக்காரன் தராசுல கல்லக் காணோம்
கடிகார நடுவுல முள்ளக் காணோம்
நாயக் கண்டா அய்யா கல்லக்  காணோம்,
நாயக் கண்டா அய்யா கல்லக் காணோம் - நான்
நாலு வார்த்தை சொல்ல வந்தேன் சொல்லக் காணோம் -நான்
நாலு வார்த்தை சொல்ல வந்தேன் சொல்லக் காணோம்



வெள்ளக் காக்கா மல்லாகப் பறக்குது
சிவப்பு யானை பல்லாக்க தூக்குது   
அவள் மருமகளாம் அவள் மாமியாராம்
இதில் இடையினிலே அவன் சாமியாரம்

இந்தப் பாடல் மிக நகைச்சுவையான பாடல்.


இந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் 
கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.


நன்றி! 
!

Tuesday, February 15, 2011

ராத்திரிப் பொழுது...

இன்றைய இந்தப் பாடலைப் பாடியவர் பீ.ஜெயச்சந்திரன்.
பாடல் இதோ:




பாடல் 15:
ராத்திரிப் பொழுது
உன்னப் பாக்கிற பொழுது
அடி வேர்த்துக் கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு
அட உங்கிட்டதான் என்ன இருக்கு
அத தெரிஞ்சிக்கிறேன் கிட்ட நெருங்கு -ஹோய்...

ராத்திரிப் பொழுது
உன்னப் பாக்கிற பொழுது
அடி வேர்த்துக் கொட்டுது
வார்த்த முட்டுது கேக்குற பொழுது

சரணம் 1:
ஓடையில, குளிர் வாடையில
ஓடையில, குளிர் வாடையில 

ஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு

ஒட்டிக்கிட நமக்கு உத்தரவு எதுக்கு
ஆடியில காவேரியாம் ... அட ஹோய் அட ஹோய்

இந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய் 

ஆடியில காவேரியாம் ... அட ஹோய் அட ஹோய்
இந்தப் பக்கம் நீ வாரியா ... அட ஹோய் அட ஹோய் 

-பாடல் தொடர்கின்றது இப்படி. நீங்கள் கேட்டதுண்டா?

படம்: ஒரு ஓடை நதியாகிறது (என்று நினைக்கிறேன்.)
பாடகர் : பீ.ஜெயச்சந்திரன்

இந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா?
இந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் 
கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

முந்தின பின்வரும் பதிவுகளில் தற்போது விடியோக்களும்
இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்.


(நன்றி: கஸ்ஸாலி.)
நன்றி! 
!

Tuesday, February 8, 2011

'ஒரு ஊரில் ஊமை ராஜா'

ன்றைய பாடல் 'ஒரு ஊரில் ஊமை ராஜா' என்ற பாடல்!
சிவகுமார், அம்பிகா நடிப்பில் வெளியான 'தீர்ப்புகள்
திருத்தப்படலாம்' என்ற படத்தில் இடம் பெற்றது இப்பாடல்.



பாடல் 14:
ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம்பட்டால்
எதைச் சொல்வதோ?  

சரணம் 1:
நெஞ்செல்லாம் ஒரே காயம்
நீ தந்தாய் என்ன நியாயம்?
மருந்து நோயாகலாமா?
மனதை நீ வாட்டலாமா?

நெஞ்செல்லாம் ஒரே காயம்
நீ தந்தாய் என்ன நியாயம்?
மருந்து நோயாகலாமா?
மனதை நீ வாட்டலாமா?


விழிகள் காண்பதென்ன மெய்தானா?
விளக்கில் என்ன இருளா?
இது கிழக்கில் அஸ்தமனமா?

கண்கள் சொல்லும் சாட்சி ஒன்று
நெஞ்சம் சொல்லும் சாட்சி ஒன்று
எந்தப்பக்கம் உண்மை என்று தீர்ப்பு சொல்லம்மா...

ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம்பட்டால்
எதைச் சொல்வதோ ? 




சரணம்: 2
நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்
நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்
வளையல் நான் வாங்கித் தந்தேன்
விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்

நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்
நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்
வளையல் நான் வாங்கித் தந்தேன்
விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்


மலரில் மாலைகட்டி நான் தந்தேன்
சிலுவை எதற்கு சுமந்தாய்?
என் மனதில் ஆணி அறைந்தாய்!
விக்கலுக்கு தண்ணி உண்டு
சிக்கலுக்கு என்ன உண்டு?
சக்கரங்கள் ரெண்டும் ரெண்டு பக்கம் செல்வதோ?


ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம்பட்டால்
எதைச் சொல்வதோ ? 



-இதுதான்  பாடல்! . 

படம்: தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்
இயக்கம்: எம்.பாஸ்கர்
நடிகர்கள்; சிவகுமார், அம்பிகா
பாடகர் : பீ.ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்கள் : சங்கர் - கணேஷ்.


'தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்' படத்தில் இரு பாடல்கள் மட்டுமே
உண்டு. இயக்குனர் எம்.பாஸ்கரின் அடுத்த படமான 
'தண்டிக்கப்பட்ட நியாயங்கள்' படத்தில் ஒரு பாடல் மட்டுமே!

மேற்படி பாடலின் பாடலாசிரியர் பற்றிய விவரம்  தெரியவில்லை.

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை
அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

நன்றி!
!  



    

Sunday, January 23, 2011

தோகைப் புல்லாங்குழல்!!!

அன்பான உங்கள் அனைவருக்கும் இந்த கலையன்பனின்
''இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்!''


இன்றைய பாடல் 'தோகைப் புல்லாங்குழல்'' என்ற பாடல்.    


பாடல் 13:
தோகைப் புல்லாங்குழல் 
தேகம் ரோஜா இதழ்
ஏழிசைப் பாட்டு இளமையில் மீட்டு
இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று!
தோகைப் புல்லாங்குழல்
தேகம் ரோஜா இதழ்...


சரணம்:
மல்லிகையை வண்டுவந்து பெண் பார்க்கும் - பின்
மாலைவரும் வந்தவுடன் கல்யாணம்
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. அ...
மொட்டுமல்லி மொட்டவிழ்ந்த சந்தோசம் - அது
முன்னும்பின்னும் பாடுதம்மா சங்கீதம் 
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. அ...
இளங்கலைப் பாடம் எதுவரைப் போகும்
என்பதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்...


அடுத்த சரணம் தொடர்கின்றது.


படம்: இளம் ஜோடிகள்
குரல்கள்: எஸ்.பீ . பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி.
நடிப்பு:  கார்த்திக், ராதா, சுரேஷ், விஜயசாந்தி.
இந்தப் பாடல் நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா?


இந்தப் பாடல் பற்றியும் இந்த இடுகைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.


!



Saturday, January 15, 2011

ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்!

அனைவருக்கும் இந்த இனிய பொங்கல் திருநாளில் 
இந்த கலையன்பனின் வாழ்த்துக்கள்!


இன்றைய இந்தப் பாடல் ஜேசுதாஸ் அவர்களும் 
வாணி ஜெயராம் அவர்களும் பாடியது.




பாடல் 12 :


ஆண்: 
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
அதுதான் காதல் பண்பாடு....
பெண்:
ஓஒ ஓஒ ஓஒ ......
ஆனபின்னாலே இருபக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு....
ஆண்:
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்

அதுதான் காதல் பண்பாடு....

பெண்:
ஆனபின்னாலே இருபக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு....

சரணம்:
ஆண்: 
தேவாமிர்தம்ம்ம்ம்...  தேனிதழ்கள்ள்ள்ள்....
தேவர்கள் இல்லை நான் வந்தேன்...
பெண்:
மாண்பின் நகரம்ம்ம்ம்... குன்றங்கள்ள்ள்ள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...
ஆண்: 

தேவாமிர்தம்...  தேனிதழ்கள்....
தேவர்கள் இல்லை நான் வந்தேன்...
பெண்:
மாண்பின் நகரம் ... குன்றங்கள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...

-இப்படி இந்தப் பாடல் தொடர்கின்றது. நல்ல  மெலோடியான பாடல்.
அனேகமாக  இப்பாடல் கே.பாலச்சந்தர் படத்தில் இடம் பெற்றிருக்கலாம்
என்று எண்ணுகிறேன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையாயிருக்கலாம்.
ஆனால், உறுதியாக சொல்ல இயலாது. 
இந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்தவர்கள்
அவசியம் உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள். 

இந்தப் பாடல்பற்றிய, இந்த இடுகைபற்றிய உங்கள் கருத்துக்களை
எதிபார்க்கிறேன்.
!




Sunday, January 9, 2011

சிரிச்சா கொள்ளிமலைக்குயிலு



பாடல்  11 :


ஆண்:
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு 
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு 
முத்துமணி தந்த மோகத்திலே...
பத்து விரல் தந்த தாகத்திலே...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு..

சரணம்:
பெண்:
காவலுக்கிங்கே யார் பொறுப்பு?
முள்ளு வளர்த்தது தாமரைப்பூ

காவலுக்கிங்கே யார் பொறுப்பு?
முள்ளு வளர்த்தது தாமரைப்பூ
உள்ளமே என்றுமே தவிப்பு
பறிபோனது என்சிரிப்பு
ஆண்:
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு 
வந்தேன் காவலுக்கு 

காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு 
வந்தேன் காவலுக்கு 
கலங்காதிருப்பாய் மனமே 
சுகமே வருமே...
சிரிச்சா கொல்லி மலைக் குயிலு 


-இவ்வாறு பாடல் தொடர்கிறது.

பாடகர்கள் :
ஆண் குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்
பெண் குரல்: சாயா

'ஈரமான ரோஜாவே என்னைப் பார்த்து மூடாதே கண்ணில் என்ன
சோகம்' என்ற பாடலில் ஜேசுதாஸ் பாடுவதைத் தொடர்ந்து
வரும் குழ்ந்தை பாடும் வரிகளைப் பாடியவர்தான் இந்த பாடலில்
ஜேசுதாசுடன் பாடிய பெண் பாடகர்.

படம், கவிஞர், இசையமைப்பாளர் பற்றிய விவரங்கள்
தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?
இந்த இடுகை பற்றியும் இந்தப் பாடல் பற்றியும் உங்கள்
கருத்துக்களை எழுதுங்கள்.


அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!

நன்றி!
!

Saturday, January 1, 2011

ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது!

இலக்கிய சாம்ராட் டாக்டர்   கோவி.மணிசேகரன் அவர்கள் 
எழுதிய நவீனம் 'யாகசாலை.'  இந்த யாகசாலை நவீனம்
திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. திரைப்படத்திற்கும் 
அதே பெயர்தான்.






இந்தப் படம் வெளியானதும், குமுதம் இதழ் இந்த 
'யாகசாலை' நவினத்தின் முழு கதையையும் 
கதைச் சுருக்கமாக குமுதத்தின் நான்கு பக்கங்களில்
மிக, மிகப் பொடி எழுத்துக்களில் வெளியிட்டிருந்தது.


இந்தப் படத்தின் இயக்குனர் டாக்டர். கோவி அவர்களா
என்பது தெரியவில்லை. (கோவி அவர்கள் தூர்தர்ஷன் 
தொலைக்காட்சியில் தனது கதைகளை, தானே
இயக்கியுள்ளார்.)


இந்தப் பாடல், அந்தப் படத்தில் இடம்பெற்றதுதான்.
மிக கலகலப்பாக, நிறைய பாடகர்கள் பாடும்
இந்தப் பாடல் மிக இனிமையாயிருக்கும். 


பாடல் 10 : 
ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
புது ராசாவை நினைக்கிறது
ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
புது ராசாவை நினைக்கிறது
கண்ணாலே ஜாலம் காட்டி,
கையாலே மேளம் தட்டி
கச்சேரி நடக்கிறது...
ஓரக்  கண்ணாலே ரசிக்கிறது
ஒரு கச்சேரி நடக்கிறது
ஒரு ரோசாப்பூ சிரிக்க்க்கிறது 


சரணம் :
கல்யாணப் பெண்களுக்கு வாழ்க்கையில் 
கணவன் தெய்வமம்மா...
கல்யாணப் பெண்களுக்கு வாழ்க்கையில் 

கணவன் தெய்வமம்மா...
கணவனின் உள்ளமேதான் மனைவிக்கு 
வாழ்ந்திடும் கோயிலம்மா...






-இப்படி இந்தப் பாடல் தொடர்கிறது.


இந்தப் பாடலைப் பாடியவர்களில் டீ.எஸ்.ராகவேந்தர்
மற்றும் எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் பெயர்கள் 
நினைவிருக்கின்றது.
இந்தப் பாடல் எழுதியவர், பாடகர்கள், பாடலுக்கு 
இசையமைத்தவர்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? 
இந்தப் பாடல் நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா?


இந்த இடுகை பற்றியும் இந்தப் பாடல் பற்றியும் உங்கள்
கருத்துக்களை எழுதுங்கள்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நன்றி!
.
Related Posts Plugin for WordPress, Blogger...