Saturday, October 26, 2013

தூங்காதே தம்பி தூங்காதே! (பாட்டை மாத்துங்க கவிஞரையா 6)

தூங்காதே தம்பி தூங்காதே! (பாட்டை மாத்துங்க கவிஞரையா 6)

இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!

ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்து கமல்ஹாசன் நடித்த படம்
'தூங்காதே தம்பி தூங்காதே!'  பட்டுக்கோட்டை திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாடலின் முதல் வரியை எடுத்து, படத் தலைப்பாகப் பயன்படுத்திக் கொண்டது அந்நிறுவனம்.

அந்தப் படத்தில் எஸ். பீ. பாலசுப்ரமணியன் ஒரு பாடல் பாடியிருப்பார். அந்தப் பாடல்:

தூங்காதே தம்பி தூங்காதே! - இப்போ
தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே  
பட்டுக்கோட்டை வார்த்தைகளைப் போட்டு - நம்ம
புரட்சியாரு பாடி வச்ச பாட்டு
முழிச்சிக்கடா நீயும் அதக் கேட்டு - உன்
சுறுசுறுப்பக் காரியத்தில் காட்டு... 


ஆக, அந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். ஆனால், தனது குரலால் அதைப் பாடியவர் திரு.டீ.எம்.சௌந்தர்ராஜன் அல்லவா? அப்படியிருக்க...
'புரட்சியாரு பாடிவச்ச பாட்டு' என்று எழுதுவது பொருத்தமல்லவே?


புரட்சியாரு அதாவது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தப் பாடலுக்கு நடித்தார் என்பதுதான் உண்மை. புரட்சியாருக்கு குரல் கொடுத்தவர் டீ.எம்.எஸ்., டீ.எம்.எஸ்., டீ.எம்.எஸ். அவர்களே என்றும் இது மறுக்க முடியாத உண்மை என்றும் உறுதியாக, அறுதியிட்டுக் கூறுகிறேன்.

எனவே பாட்டை பின்வருமாறு மாத்துங்க கவிஞரையா!

தூங்காதே தம்பி தூங்காதே நீ
தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
பட்டுக்கோட்டை வார்த்தைகளைப் போட்டு - நம்ம  
டீஎம்மெஸ்ஸு பாடி வச்ச பாட்டு


அல்லது

தூங்காதே தம்பி தூங்காதே நீ
தூங்கிப்புட்டு  பின்னாடி ஏங்காதே
பட்டுக்கோட்டை வார்த்தைகளைப் போட்டு - நம்ம  
புரட்சியாரு நடிச்சிவச்ச பாட்டு!!!


-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*

Tuesday, October 1, 2013

சில நேரம் சில பொழுது! (பாடல் 21)

சில நேரம் சில பொழுது!

சேரனின் 'ஆட்டோகிராஃப்' படத்தில் எஸ்.சித்ரா பாடிய
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!" என்கிற பாடல்
செம ஹிட். அந்தப் பாடல் சோர்வுற்றிருக்கும் எவருக்கும்
தன்னம்பிக்கையை அளித்துவிடும் ஆற்றல் கொண்டது.

அதே காலக்கட்டத்தில் வெளியான 'கிச்சா வயசு 16'
என்ற படத்தில் வரும் "சில நேரம் சில பொழுது" என்கிற
பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இந்தப் பாடல்கூட
உற்சாகத்தைத் தரும் தத்துவப் பாடலே!

படம்: கிச்சா வயசு 16.
நடிகர்கள்: ஜெய் ஆகாஷ், சிம்ரன், சுஜிபாலா, மணிகண்டன்.
இயக்கம்: ஏ.என்.ராஜகோபால்.
படம் வெளிவந்த நாள்: 25 மார்ச் 2005.
பாடகர்: உன்னி மேனன்


பாடல் 21:
பல்லவி:

சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது
நம்பிக்கையாய் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது
லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம்
இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம்
சூரியன் என்பதுகூட சிறு துளிதான்
சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்விதான்
[சில நேரம்...]

சரணம் 1:
வானம் தரையில் மோதாது
பூமி நகர்ந்து போகாது
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை
தொலைந்து ஒன்றும் போகாது
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும்தான் ஏற்றுக் கொண்டால்
வாழ்க்கை என்றும் தோற்காது
நெஞ்சே உன் நெஞ்சே தடையாவும் துரும்பு
தீயாய் நீயானால் மெழுகாகும் விருந்து
தோல்வி அவை எல்லாம் சில காயம் தழும்பு
ஏறு முன்னேறு  ஒளியோடு திரும்பு
பறவை அதற்கு இறகு சுமையா
தோல்வி ஒரு தடையா
[சில நேரம்...]

சரணம் 2:
உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது
பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது
இன்று வந்த ராஜாக்கள் நேற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும்போது தன்னை நம்பி வாழ்ந்தார்கள்
கோடு அது நீளும் புது கோலம் பிறக்கும்
மேடு அதில் ஏறும் நீர் வேகம் எடுக்கும்
சோகம் அதை வென்றால் ஒரு சக்தி பிறக்கும்
பாதை சில போனால் பல பாதை திறக்கும்
நேற்றை மறப்போம் நாளை ஜெயிப்போம்
இன்று ஜெயித்திருப்போம்
[சில நேரம்...]

இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் யார் என்பது
தெரிந்தால் சொல்லுங்கள்.

-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*




Related Posts Plugin for WordPress, Blogger...