Saturday, October 24, 2015

அறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்

அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது!


திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

படம்:  காதல் ஜோதி.
பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்.
பாடலாசிரியர்: பேரறிஞர் அண்ணா அவர்கள்.

நடிகர் இரவிச்சந்திரனுக்கு, கோவிந்தராஜனின் குரல் ஏகப் பொருத்தம்!

இதோ பாடல்:

பல்லவி:

ஓஓ ...
உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமாச் சொல்லுறெண்டி தங்க ரத்தினமே
தாள முடியாது கண்ணே  பொண்ணு ரத்தினமே

உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமாச் சொல்லுறெண்டி தங்க ரத்தினமே
தாள முடியாது கண்ணே  பொண்ணு ரத்தினமே

ஏ தங்க ரத்தினம் பொண்ணு ரத்தினம்
தங்க ரத்தினம் பொண்ணு ரத்தினம்
உன் மேல கொண்ட ஆச...

சரணம் 1:

சித்திரைக்கு பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசி போல்
சித்திரைக்கு பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசி போல்
முத்தழகி நீயும் நானும் தங்க ரத்தினமே
மூணு முடிச்சுபோட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே

நேத்து நீ போட்ட கோலம் நீர்கோலம் ஆகிபோச்சு
மாக்கோலம் போட்டுக்கலாம் தங்க ரத்தினமே
என்னை மச்சான்னு கூப்பிடம்மா பொண்ணு ரத்தினமே
ஏ தங்கம் ஏ பொண்ணு ஏ தங்கம் ஏ பொண்ணு

உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமாச் சொல்லுறெண்டி தங்க ரத்தினமே
தாள முடியாது கண்ணே  பொண்ணு ரத்தினமே
உன் மேல கொண்ட ஆச...

சரணம் 2:

ஈரோட்டு சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்
ஈரோட்டு சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்
காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்க ரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே
ஈரோட்டு சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்
காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்க ரத்தினமே

தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே

கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாக போக வேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணை இருப்பேன்  பொண்ணு ரத்தினமே
கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாக போக வேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணை இருப்பேன்  பொண்ணு ரத்தினமே
ஏ தங்கம் ஏ பொண்ணு ஏ தங்கம் ஏ பொண்ணு

உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமாச் சொல்லுறெண்டி தங்க ரத்தினமே
தாள முடியாது கண்ணே  பொண்ணு ரத்தினமே

* கேட்க, கேட்க திகட்டாத பாடல்!
கேட்போம் வாருங்கள்!


நன்றி!     

Sunday, February 9, 2014

பெயர் புதிர் விளையாட்டு!

இப்பொழுது ஒரு புதிர் விளையாட்டு விளையாடலாம்! கீழே 15 பெண்(  நடிகை)களின் பெயர்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு (நடிகை) பெயரைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.  


1. நமீதா
2. குஷ்பு
3. பிரியா மணி
4. சுனைனா
5. பிரணிதா
6. சினேகா
7. கார்த்திகா
8. துளசி
9. பிந்துகோஷ் sorry, பிந்து மாதவி
10.சுரபி
11.அசின்
12.அமலா பால்
13.நயன்தாரா
14. த்ரிஷா
15.ஸ்ரீதிவ்யா   



இப்போது கீழே உள்ள 4 பட்டியல்களில் எந்தெந்த பட்டியல்களில் உங்கள் அபிமான பெயர் இருக்கின்றது என்பதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பட்டியல் 1:
===========
நமீதா
பிரியா மணி
பிரணிதா
கார்த்திகா
பிந்து மாதவி
அசின்
நயன்தாரா
ஸ்ரீதிவ்யா


பட்டியல் 2:
==========
அசின்
ஸ்ரீதிவ்யா
சுரபி
கார்த்திகா
சினேகா
த்ரிஷா
பிரியா மணி
குஷ்பு


பட்டியல் 3:
==========
சுனைனா
பிரணிதா
நயன்தாரா
சினேகா
அமலா பால்
கார்த்திகா
த்ரிஷா
ஸ்ரீதிவ்யா  


பட்டியல் 4:
==========
ஸ்ரீதிவ்யா
த்ரிஷா
நயன்தாரா
அமலா பால்
அசின்
சுரபி
பிந்து மாதவி
துளசி


சரி...  பார்த்துவிட்டீர்களா? நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் எது என்று நான் சொல்லவா?
முதல் வழி:
பட்டியல் எண் 1-ல் மட்டும் இருந்தால் உங்கள் தேர்வு: நமீதா.
பட்டியல் எண் 2-ல் மட்டும் இருந்தால் உங்கள் தேர்வு: குஷ்பு.
பட்டியல் எண்கள் 1 & 2-ல்  இருந்தால் உங்கள் தேர்வு: பிரியா மணி.
.......   .....
பட்டியல் எண்கள் 1, 2, 3 & 4 இவைகளில் இருந்தால், ஸ்ரீதிவ்யா
என்று இப்படி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். இதை காப்பி & பேஸ்ட் செய்துவைத்துக் கொண்டால், ஈசியாக விடை சொல்லிவிடலாம். 



இன்னொரு வழி இருக்கின்றது, அது:
ஃபார்முலா வழி!


அதாவது, இந்த புதிரை உங்கள் நண்பரிடம் காட்டி விளையாடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நண்பர் இந்த, இந்த பட்டியல்களில் பெயர் இருக்கின்றது என்று நம்மிடம் சொன்ன அடுத்த நொடியே நாம் விடையைச் சொல்லிவிடலாம்.


இதுதான் அந்த வழிமுறை:
ஒவ்வொரு பட்டியலுக்கும் ஒவ்வொரு மதிப்பு உள்ளது.
முதல் பட்டியலின் மதிப்பு =1.
இரண்டாம் பட்டியலின் மதிப்பு =2.
மூன்றாம் பட்டியலின் மதிப்பு =4.
நான்காம் பட்டியலின் மதிப்பு =8.



நண்பர் எந்தெந்த பட்டியலில் பெயர் இருப்பதாகக்  கூறுகிறாரோ, அந்த பட்டியலின் மதிப்பைக் கூட்டிக் கொண்டே வாருங்கள். அவர் சொல்லி முடித்ததும் கூட்டல் மதிப்பு எத்தனை வந்ததோ, அதே எண்ணுக்கு நேராக உள்ள பெயர்தான் நண்பர் மனதினுள் நினைத்தது.


இந்த புதிரை நீங்களே விளையாடிப் பார்க்கலாம்: நண்பரையும் பங்கு கொள்ளச் சொல்லி, பதில் சொல்லி அவரை நீங்கள் அசத்தலாம்.
http://blogintamil.blogspot.com/2013/11/blog-post_3.html படம்- நன்றி: வலைச்சரம்.


-கலையன்பன்.

Saturday, November 30, 2013

பாட்டு ஒற்றுமை - 6

Sri-divya-half-saree-Varutha-Padatha-Valibar-Sangham-movie


வேடன் படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
[எஸ்.பீ.பாலசுப்ரமணியம், எஸ்.சித்ரா பாடியது.]


"அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவே இப்ப என்ன பண்ணுவ?
கம்மா கரையில சும்மா நான் இருந்தா என்ன பண்ணுவ?
தப்பிக்க நினச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ?
நானும் குதிச்சா என்ன பண்ணுவ?"


இதே டைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னே ஒரு திரைப் பாடல் வந்துள்ளது. அது இதுதான்:

ஆண்: ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் நாடு சாமத்திலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் நாடு சாமத்திலே


பெண்: ஊரார் உறங்கும்போது உற்றாரும் தூங்கும்போது
நல்ல பாம்பு வேடங் கொண்டு நடுச்சாமம் நீ வந்தாயானால்
ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் பறந்திடுவேனே

ஆண்: ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் நீ பறந்தாயானால்
ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் நீ பறந்தாயானால்
செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்

பெண்: செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
பூமியைத் தேடியல்லோ புல்லாய் முளைத்திடுவேன்

ஆண்: பூமியைத் தேடியல்லோ புல்லாய் நீ  முளைத்தாயானால்
பூமியைத் தேடியல்லோ புல்லாய் நீ  முளைத்தாயானால்
காராம்பசு வேடங் கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை

பெண்: காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
ஆல மரத்தடியில் அரளிச் செடி ஆவேன்
ஆல மரத்தடியில் அரளிச் செடி ஆவேன்

ஆண்: ஆல மரமுறங்க அடி மரத்தில் நீ உறங்க
உன் மடியில் நான் உறங்க என்ன தவம்செய்தேனோ?

ஆண் + பெண்: ஆஆஅ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ...... 

இந்த சுவை மிகுந்த பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்,
கவிஞர், பாடகர்கள் பெயர்கள் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.


இந்த இரு பாடல்களையும்  ஒப்பிட்டுப் பார்த்து ரசித்தீர்களா?
நன்றி!

 
- கலையன்பன்.
***உங்கள் கருத்துரைகளை வழங்குங்கள் நண்பர்களே!*** 

Friday, November 1, 2013

பாட்டு ஒற்றுமை - 5

தீப ஒளி வாழ்த்துக்கள்!!! 

பல திரைப்படங்களில் நிறைய   கவிஞர்கள் காதலியை வர்ணித்து பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.  அவர்கள் காதலியின் முகத்தையும் குறிப்பாக அவர்களின் கண்களையும் வர்ணித்து எழுதியிருக்கிறார்கள்.
பின் வரும் சில பாடல்களைப் பாருங்கள்.

1. கண்களும் கவிபாடுதே... (படம்: அடுத்தவீட்டுப் பெண்.)

2. கண்ணாலே பண்பாடும் உன்னாலே  வாழ்விலே   இன்பம் கொண்டாடுவேன்.

3. கலையே உன் விழிகூட கவி பாடுதே! தங்கச்
சிலையே உன் நிழல்கூட ஒளிவீசுதே!


ஆக, காதலியை வர்ணிப்பதென்றால், அவளுடைய கண்களை
மட்டுமல்லாது, அந்தக் கண்கள் 'கவி பாடுது' என்றும்
'பண் பாடுது' என்றும் கவிஞர்கள் பாடலை எழுதிவிடுகிறார்கள்.
இன்னும் சில கவிஞர்கள் எழுதும் பாடலில் அந்தக்
கண்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்பதையும் பாருங்கள்.

1. கண்களின் வார்த்தைகள் புரியாதோ?

2. கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே

3. பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா?

4. விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே 

ஒவ்வொரு கவிஞரும் தத்தமது கற்பனையைக் கொண்டு
ராகத்திற்கு ஏற்றபடி வேறு வேறு வார்த்தைகளில்
தந்துள்ளது ரசிக்கும்படி இருக்கின்றதல்லவா?

கவிஞர்களின் பெயர்களையும் தெரிந்தால்
கூறுங்களேன்.

-கலையன்பன்.
                                                         

                                                                
                                                                         

***உங்கள் கருத்துரைகளை வழங்குங்கள் நண்பர்களே!*** 




Saturday, October 26, 2013

தூங்காதே தம்பி தூங்காதே! (பாட்டை மாத்துங்க கவிஞரையா 6)

தூங்காதே தம்பி தூங்காதே! (பாட்டை மாத்துங்க கவிஞரையா 6)

இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!

ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்து கமல்ஹாசன் நடித்த படம்
'தூங்காதே தம்பி தூங்காதே!'  பட்டுக்கோட்டை திரு.கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாடலின் முதல் வரியை எடுத்து, படத் தலைப்பாகப் பயன்படுத்திக் கொண்டது அந்நிறுவனம்.

அந்தப் படத்தில் எஸ். பீ. பாலசுப்ரமணியன் ஒரு பாடல் பாடியிருப்பார். அந்தப் பாடல்:

தூங்காதே தம்பி தூங்காதே! - இப்போ
தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே  
பட்டுக்கோட்டை வார்த்தைகளைப் போட்டு - நம்ம
புரட்சியாரு பாடி வச்ச பாட்டு
முழிச்சிக்கடா நீயும் அதக் கேட்டு - உன்
சுறுசுறுப்பக் காரியத்தில் காட்டு... 


ஆக, அந்தப் பாடலை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். ஆனால், தனது குரலால் அதைப் பாடியவர் திரு.டீ.எம்.சௌந்தர்ராஜன் அல்லவா? அப்படியிருக்க...
'புரட்சியாரு பாடிவச்ச பாட்டு' என்று எழுதுவது பொருத்தமல்லவே?


புரட்சியாரு அதாவது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தப் பாடலுக்கு நடித்தார் என்பதுதான் உண்மை. புரட்சியாருக்கு குரல் கொடுத்தவர் டீ.எம்.எஸ்., டீ.எம்.எஸ்., டீ.எம்.எஸ். அவர்களே என்றும் இது மறுக்க முடியாத உண்மை என்றும் உறுதியாக, அறுதியிட்டுக் கூறுகிறேன்.

எனவே பாட்டை பின்வருமாறு மாத்துங்க கவிஞரையா!

தூங்காதே தம்பி தூங்காதே நீ
தூங்கிப்புட்டு பின்னாடி ஏங்காதே
பட்டுக்கோட்டை வார்த்தைகளைப் போட்டு - நம்ம  
டீஎம்மெஸ்ஸு பாடி வச்ச பாட்டு


அல்லது

தூங்காதே தம்பி தூங்காதே நீ
தூங்கிப்புட்டு  பின்னாடி ஏங்காதே
பட்டுக்கோட்டை வார்த்தைகளைப் போட்டு - நம்ம  
புரட்சியாரு நடிச்சிவச்ச பாட்டு!!!


-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*

Tuesday, October 1, 2013

சில நேரம் சில பொழுது! (பாடல் 21)

சில நேரம் சில பொழுது!

சேரனின் 'ஆட்டோகிராஃப்' படத்தில் எஸ்.சித்ரா பாடிய
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!" என்கிற பாடல்
செம ஹிட். அந்தப் பாடல் சோர்வுற்றிருக்கும் எவருக்கும்
தன்னம்பிக்கையை அளித்துவிடும் ஆற்றல் கொண்டது.

அதே காலக்கட்டத்தில் வெளியான 'கிச்சா வயசு 16'
என்ற படத்தில் வரும் "சில நேரம் சில பொழுது" என்கிற
பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இந்தப் பாடல்கூட
உற்சாகத்தைத் தரும் தத்துவப் பாடலே!

படம்: கிச்சா வயசு 16.
நடிகர்கள்: ஜெய் ஆகாஷ், சிம்ரன், சுஜிபாலா, மணிகண்டன்.
இயக்கம்: ஏ.என்.ராஜகோபால்.
படம் வெளிவந்த நாள்: 25 மார்ச் 2005.
பாடகர்: உன்னி மேனன்


பாடல் 21:
பல்லவி:

சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது
நம்பிக்கையாய் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது
லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம்
இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம்
சூரியன் என்பதுகூட சிறு துளிதான்
சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்விதான்
[சில நேரம்...]

சரணம் 1:
வானம் தரையில் மோதாது
பூமி நகர்ந்து போகாது
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை
தொலைந்து ஒன்றும் போகாது
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும்தான் ஏற்றுக் கொண்டால்
வாழ்க்கை என்றும் தோற்காது
நெஞ்சே உன் நெஞ்சே தடையாவும் துரும்பு
தீயாய் நீயானால் மெழுகாகும் விருந்து
தோல்வி அவை எல்லாம் சில காயம் தழும்பு
ஏறு முன்னேறு  ஒளியோடு திரும்பு
பறவை அதற்கு இறகு சுமையா
தோல்வி ஒரு தடையா
[சில நேரம்...]

சரணம் 2:
உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது
பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது
இன்று வந்த ராஜாக்கள் நேற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும்போது தன்னை நம்பி வாழ்ந்தார்கள்
கோடு அது நீளும் புது கோலம் பிறக்கும்
மேடு அதில் ஏறும் நீர் வேகம் எடுக்கும்
சோகம் அதை வென்றால் ஒரு சக்தி பிறக்கும்
பாதை சில போனால் பல பாதை திறக்கும்
நேற்றை மறப்போம் நாளை ஜெயிப்போம்
இன்று ஜெயித்திருப்போம்
[சில நேரம்...]

இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் யார் என்பது
தெரிந்தால் சொல்லுங்கள்.

-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*




Sunday, September 29, 2013

பெத்து எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5)

பெத்து எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5)
இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!

ரஜினி நடித்த 'வேலைக்காரன்' படத்தில் கவிஞர் மு.மேத்தா
எழுதி மலேஷியா வாசுதேவன் பாடிய இந்தப் பாடலைக்
கேட்டிருப்பீர்கள்.

"பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியக் கட்டிப்புட்டா
பெத்தவ மனசு பித்தாச்சு - இந்த
பிள்ளையின் மனசு கல்லாச்சு"

இந்த மகன் பாடும்போது தனது அம்மா தன்னை தத்து
கொடுத்துப்புட்டாள் என்றும் தன்னை வித்துப்புட்டாள்
என்றும் அடுத்தடுத்து பாடுகின்றான். இதில் தத்து
கொடுத்தாளா அல்லது வித்தாளா என்று குழப்பம்தான் வருகின்றது.

அடுத்து, பிள்ளையை தாய் பெறுகின்றாள். அந்த ஒரு
தியாகத்திற்காகவே, அந்த மகன் அவனது தாய்க்கு
பெரும் கடமைப் பட்டிருக்கின்றான். அதாவது தாய்க்கு
அவன் கடன் பட்டிருக்கின்றான். அதனால், அந்த
தியாகத்தை மனதில் நிலைநிறுத்தி, அதற்கான
பரிகாரமாய் அந்தத் தாய்க்கு, மகன் நன்றிக்கடன்
பட்டிருக்கின்றான். அதாவது கடன் பட்டிருக்கின்றான்
என்றும் வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு அந்த மகன்,
தாய்க்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றால்,
கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அத்தாய்
மகனை விற்று வட்டியை எடுத்துக் கொள்ளலாம். இது
நியதி.

ஆக, மகன் தான் தாய்க்கு கடன் பட்டிருக்கின்றான்
என்பதும் தாய்க்குத்தான் அந்த வட்டி செலுத்தப்படவேண்டும்
என்பதும் நமக்குத் தெரியவருகின்றது. தாய், வேறு யாருக்கும்
கடன் படவில்லை என்பதும் அவள் வட்டியை யாருக்கும்
செலுத்தத் தேவையில்லை என்பதும் நமக்குப் புரியவருகின்றது.
பாடலில் வரும் 'வட்டியக் கட்டிப்புட்டா' என்ற வார்த்தை
மாறுபட்ட அர்த்தத்தைத் தருகின்றது. வேறு ஒருவருக்கு
வட்டியை செலுத்திவிட்டாள் என்ற பொருள்பட இங்கு
பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பாட்டை பின்வருமாறு மாத்துங்க கவிஞரையா!

"பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டிஎடுத்துக்கிட்டா"

-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*
Related Posts Plugin for WordPress, Blogger...