Sunday, February 9, 2014

பெயர் புதிர் விளையாட்டு!

இப்பொழுது ஒரு புதிர் விளையாட்டு விளையாடலாம்! கீழே 15 பெண்(  நடிகை)களின் பெயர்கள் இருக்கின்றன. அதிலிருந்து ஒரு (நடிகை) பெயரைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.  


1. நமீதா
2. குஷ்பு
3. பிரியா மணி
4. சுனைனா
5. பிரணிதா
6. சினேகா
7. கார்த்திகா
8. துளசி
9. பிந்துகோஷ் sorry, பிந்து மாதவி
10.சுரபி
11.அசின்
12.அமலா பால்
13.நயன்தாரா
14. த்ரிஷா
15.ஸ்ரீதிவ்யா   



இப்போது கீழே உள்ள 4 பட்டியல்களில் எந்தெந்த பட்டியல்களில் உங்கள் அபிமான பெயர் இருக்கின்றது என்பதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பட்டியல் 1:
===========
நமீதா
பிரியா மணி
பிரணிதா
கார்த்திகா
பிந்து மாதவி
அசின்
நயன்தாரா
ஸ்ரீதிவ்யா


பட்டியல் 2:
==========
அசின்
ஸ்ரீதிவ்யா
சுரபி
கார்த்திகா
சினேகா
த்ரிஷா
பிரியா மணி
குஷ்பு


பட்டியல் 3:
==========
சுனைனா
பிரணிதா
நயன்தாரா
சினேகா
அமலா பால்
கார்த்திகா
த்ரிஷா
ஸ்ரீதிவ்யா  


பட்டியல் 4:
==========
ஸ்ரீதிவ்யா
த்ரிஷா
நயன்தாரா
அமலா பால்
அசின்
சுரபி
பிந்து மாதவி
துளசி


சரி...  பார்த்துவிட்டீர்களா? நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் எது என்று நான் சொல்லவா?
முதல் வழி:
பட்டியல் எண் 1-ல் மட்டும் இருந்தால் உங்கள் தேர்வு: நமீதா.
பட்டியல் எண் 2-ல் மட்டும் இருந்தால் உங்கள் தேர்வு: குஷ்பு.
பட்டியல் எண்கள் 1 & 2-ல்  இருந்தால் உங்கள் தேர்வு: பிரியா மணி.
.......   .....
பட்டியல் எண்கள் 1, 2, 3 & 4 இவைகளில் இருந்தால், ஸ்ரீதிவ்யா
என்று இப்படி சொல்லிக் கொண்டேயிருக்கலாம். இதை காப்பி & பேஸ்ட் செய்துவைத்துக் கொண்டால், ஈசியாக விடை சொல்லிவிடலாம். 



இன்னொரு வழி இருக்கின்றது, அது:
ஃபார்முலா வழி!


அதாவது, இந்த புதிரை உங்கள் நண்பரிடம் காட்டி விளையாடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நண்பர் இந்த, இந்த பட்டியல்களில் பெயர் இருக்கின்றது என்று நம்மிடம் சொன்ன அடுத்த நொடியே நாம் விடையைச் சொல்லிவிடலாம்.


இதுதான் அந்த வழிமுறை:
ஒவ்வொரு பட்டியலுக்கும் ஒவ்வொரு மதிப்பு உள்ளது.
முதல் பட்டியலின் மதிப்பு =1.
இரண்டாம் பட்டியலின் மதிப்பு =2.
மூன்றாம் பட்டியலின் மதிப்பு =4.
நான்காம் பட்டியலின் மதிப்பு =8.



நண்பர் எந்தெந்த பட்டியலில் பெயர் இருப்பதாகக்  கூறுகிறாரோ, அந்த பட்டியலின் மதிப்பைக் கூட்டிக் கொண்டே வாருங்கள். அவர் சொல்லி முடித்ததும் கூட்டல் மதிப்பு எத்தனை வந்ததோ, அதே எண்ணுக்கு நேராக உள்ள பெயர்தான் நண்பர் மனதினுள் நினைத்தது.


இந்த புதிரை நீங்களே விளையாடிப் பார்க்கலாம்: நண்பரையும் பங்கு கொள்ளச் சொல்லி, பதில் சொல்லி அவரை நீங்கள் அசத்தலாம்.
http://blogintamil.blogspot.com/2013/11/blog-post_3.html படம்- நன்றி: வலைச்சரம்.


-கலையன்பன்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட...!

கலையன்பன் said...

@ திண்டுக்கல் தனபாலன் ...

வருகைக்கும் முதல் கருத்திற்கும் நன்றி!
விளையாடிப் பார்த்தீர்களா சார்?

அம்பாளடியாள் said...

வணக்கம் !
வாழ்த்துக்கள் தங்களின் தளத்தினை இன்று தான் அறிந்து கொண்டேன் சிறப்பான ஆக்கங்கள் இங்கும் இருப்பதை அறிந்துகொண்டேன் .மென்மேலும் தங்களின் ஆக்கங்கள் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

கலையன்பன் said...

@ அம்பாளடியாள் வலைத்தளம் ...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

என்னுடைய வரயிருக்கும் மற்ற ஆக்கங்களுக்கும் தொடர்ந்து வந்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மகேந்திரன் said...

சரியான விளையாட்டு தான் நண்பரே...

கலையன்பன் said...

@ மகேந்திரன் ...

வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...