Sunday, June 9, 2013

'சோ'வின் நகைச்சுவை!














ஒரு படத்தில் சோ நடித்த ஒரு காமெடி வரும்.
சோ ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருப்பார்.
பக்கத்தில் குழந்தையுடன் நிற்கும் ஒரு பெண்ணிடம் பேச்சு கொடுப்பார்.

சோ : "இந்தக் குழந்தை அழகாயிருக்கு. இது உங்க குழந்தையா?:"

பெண்: "ஆமாம்!"

சோ : "உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"
அந்தப் பெண் சோவை பளார் என்று அறைந்து விடுவார்.

இதை தனது நண்பனிடம் சொல்வார் சோ.

சோ: "அவள் எப்படி அடிச்சா தெரியுமாடா?"

நண்பர்: "எப்படிடா அடிச்சா?"

சோ, நண்பரை பளார் என்று அறைந்துவிட்டு "இப்படித்தான்டா அடிச்சா" என்பார்.

நண்பர்: "ஏன்டா இப்படி குடிச்சி உடம்பைக் கெடுத்துக்கிறே?"

சோ :"டாக்டர்தான்டா என்னைக் குடிக்கச் சொன்னார்" என்பார்.
(சாராயக்கடையைத் திறந்த டாக்டர் கலைஞரைக் குறிப்பிடுகிறார்.)

சோ : "டேய் அடி வாங்காம எப்படிடா பெண்கள்கிட்ட பேசுறது?"

நண்பர் ஐடியா தருவார். "முதல்ல கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டுவிட்டு
அப்புறமா குழந்தை உங்களுதானு கேட்கணும்" என்பார் நண்பர்.

மறுநாள் பஸ் ஸ்டாண்டில் குழந்தையுடன் நிற்கும் வேறு பெண்ணிடம் கேட்பார் சோ.

சோ : "உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"

பெண்: "இல்லை!"

சோ : "இந்தக் குழந்தை உங்களுதுதானே?"
அந்தப் பெண்ணிடமும் அறை வாங்குவார் சோ.

-இந்த நகைச்சுவை எந்தப் படத்தில் இடம்பெறுகிறது?
தெரிந்தவர்கள் சொல்லவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...