Sunday, December 19, 2010

எந்த இரவு முதலிரவு?

இன்றைய பாடல் மெலோடியான, அதே நேரம் சோகமான 
பாடலான "எந்த இரவு முதலிரவு?" என்கின்ற பாடல்.
மேலோடி வகைப் பாடல்கள் மனதை ஊடுருவி சென்று
இதயத்தில் ஒருவகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் இந்தப் பாடலைப் படித்துப் பார்த்தீர்கள்
என்றால், இது ஒரு சோகப் பாடல் என்பதையும், இப்பாடலை 
எஸ்.பீ. பாலசுப்ரமணியம் பாடியிருக்கலாம் என்றும், இது
காதாநாயகன் குடித்துவிட்டுப் பாடுவது போன்ற காட்சி என்றும்,
மனைவியால் மிக மனமுடைந்த கதாநாயகன் தனது உள்ளக் 
குமுறல்களைப் பாடலாய் வெளிப்படுத்துகின்றான் என்பதையும்
நீங்களே உணர்வீர்கள்.
இதுதான் பாடல்:-

பாடல் 8 :
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் எந்த  புரியல
கணவன்   வேஷம் போட்டுக்கிட்டேன் கூத்து நடக்கல - உடன்
நடிக்க வந்த மனைவியவள் கதைய மதிக்கல
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் எந்த  புரியல

சரணம் :
நூத்துல பத்துதான் காதலில் ஜெயிக்கிறது 
தொண்ணூறு ஜோடிகள் கண்ணீரில் மிதக்குது

நூத்துல.... பத்துதான்.... காதலில்.... ஜெயிக்கிறது 
தொண்ணூறு ஜோடிகள் கண்ணீரில் மிதக்குது

வாழ்ந்தால் இல்லறம் வீழ்ந்தால் போர்க்களம் 
வாழ்ந்தால் இல்லறம் வீழ்ந்தால் போர்க்களம்

வாழ்வதும் வீழ்வதும் வந்தவள் கைவசம்
வாழ்வதும் வீழ்வதும் வந்தவள் கைவசம்

எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் எந்த  புரியல

சரணம் :
குடும்பம் சொர்க்கமாம் சொன்னவன் யாரடா அவன்?
நரகத்தில் வாழ்ந்திடும் நாயகன் நானடா

குடும்பம் சொர்க்கமாம் சொன்னவன் யாரடாடாடா... அவன்?
நரகத்தில் வாழ்ந்திடும் நாயகன் நானடா

பாடல் தொடர்கின்றது...

பாடியவர் திரு. எஸ். பீ. பாலசுப்ரமணியம் அவர்கள்.
பாடலாசிரியர் திரு. காமகோடியன் என்று எண்ணுகிறேன்.
படம், இசையமைப்பாளர் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

!

15 comments:

Unknown said...

இந்த பாடலை இது வரை கேட்டதில்லை. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள். உங்கள் வலைப்பூவுக்கு எமது முதல் வருகை. நன்றாக வடிவமைத்துள்ளீர்கள். வலையுலகில் சாதிக்க எமது வாழ்த்துக்கள்.

கலையன்பன் said...

@பாரத்... பாரதி...

தங்கள் முதல் வருகைக்கும் தங்கள் கருத்துரைக்கும்
தங்கள் வாத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்!
இதுவரை நான் 7 இடுகைகள் மட்டுமே பதிவு
செய்துள்ளேன். அவற்றைப் படித்து, அந்தப் பாடல்கள்
பற்றிய தங்கள் கருத்துக்களையும் தரக் கேட்டுக்கொள்கிறேன்.

r.v.saravanan said...

கலையன்பன் இந்த பாடலை கேட்டிருக்கிறேன் நினைவுக்கு வரவில்லை

கலையன்பன் said...

@r.v.saravanan ...

நன்றி சரவணன்...
நினைவுக்கு வந்தால் உடன் வந்து
பின்னூட்டத்தில் சொல்வீர்களா?

ம.தி.சுதா said...

ஃஃஃஃவாழ்ந்தால் இல்லறம் வீழ்ந்தால் போர்க்களம்ஃஃஃஃ

இந்த இடத்தல் ஒரு அழுத்தம் இருக்கிறதல்லவா...

கலையன்பன் said...

@ம.தி.சுதா ...

தாங்கள் கூறுவதுபோல் பாடலாசிரியரின் கருத்து
அழுத்தமானதுதான்!

இவ்வுலகம் இனிது said...

இந்தப் பாடல் இடம்பெற்ற படம் சின்னஞ்சிறுசுகள். சுரேஷ் பிரபு நடித்ததென ஞாபகம்.இந்தப் பாடலின் mp3 file கிடைத்தால் சொல்லவும்.

tamilkader said...

95 -97 -இல் இந்த படத்தை சன்-டிவி-இல் பார்த்த ஞாபகம் .
அருமையான பாடல் . பிரபு சுலக்ஷ்னா மோகன் நடித்த படம்
பாடலின் இறுதி வரிகளில் spb அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் சொல்லுவார்.

@ செல்லப்பா.. வருகைக்கும் தகவல் தந்தமைக்கும் நன்றி.

கலையன்பன் said...

@ tamilkader... தகவலுக்கு நன்றி. ஆங்கில வசனம் 2ஆம் சரணத்தில் இடையில் வரும். பாடல் நீண்ட நாட்கள் முன்னே கேட்டதால் வாசகம் ஞாபகமில்லை.

Unknown said...

http://www.facebook.com/unnalmudiyumthampi

Unknown said...

http://www.facebook.com/unnalmudiyumthampi

Unknown said...

இந்தப் பாடல் இடம்பெற்ற படம் சின்னஞ்சிறுசுகள். சுரேஷ் பிரபு நடித்ததென ஞாபகம்.இந்தப் பாடலின் mp3 file கிடைத்தால் சொல்லவும்.

http://www.facebook.com/unnalmudiyumthampi

Unknown said...

பாடும் நிலா பாலா ரசிகன் சுவிட்சர்லாந்து

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...