பாட்டு ஒற்றுமை (3)
இளையராஜா இசையில் எஸ்.பீ.பாலசுப்ரமணியன், எஸ்.ஜானகி இருவரும்
இணைந்து பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
(படம்: பயணங்கள் முடிவதில்லை
இயக்கம்: ஆர்.சுந்தர்ராஜன்
தயாரிப்பு: கோவைத்தம்பி)
"மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருக்கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணிவாசலை
மூடுதல் முறையோ?"
இப்பாடலின் இரண்டாவது சரணத்தில் வரும் வரிகள் இவை:
"பாதை மாறி போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறி போடும்போது
ராகம் தோன்றாது"
- என்ற வரிகளை கவிஞர் எழுதியிருப்பார்.
'சவாலே சமாளி' படத்தில் இடம்பெறும் டீ.எம்.சௌந்திரராஜன்
பாடிய இந்தப் பாடலையும் கேட்டிருப்பீர்கள்.
"நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது
என்னைத் தொடாதே!
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
திருநீலகண்டரின் மனைவி சொன்னது
(நிலவைப் பார்த்து....)
ராகத்தைத் தாளம் தொடாமல் போய்விடில்
பாடலை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தைதன்னையே தாய் தொடாவிடில்
நீயும் இல்லையே நானும் இலையே
நீயும் இல்லையே இங்கு நானும் இல்லையே
(நிலவைப் பார்த்து...)"
எஸ்.பீ.பாலசுப்ரமணியன், எஸ்.ஜானகி இணைந்து பாடியது:
"தாளம் மாறி போடும்போது
ராகம் தோன்றாது"
சௌந்திரராஜன் பாடியது:
"ராகத்தைத் தாளம் தொடாமல் போய்விடில்
பாடலை நெஞ்சம் தொடாமல் போகுமே"
(இந்தப் பாடல் பற்றிய மற்றோர் ஒப்பீடு,
'பாட்டு ஒற்றுமை - 2'-ல் காணலாம்.)
ஆக, ஒரே கருத்தை, இரு கவிஞர்கள்
ராகத்திற்கு ஏற்றபடி வேறு வேறு வார்த்தைகளில்
தந்துள்ளது ரசிக்கும்படி இருக்கின்றதல்லவா?
இரு கவிஞர்களின் பெயர்களையும் தெரிந்தால்
கூறுங்களேன்.
-கலையன்பன்.
இளையராஜா இசையில் எஸ்.பீ.பாலசுப்ரமணியன், எஸ்.ஜானகி இருவரும்
இணைந்து பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
(படம்: பயணங்கள் முடிவதில்லை
இயக்கம்: ஆர்.சுந்தர்ராஜன்
தயாரிப்பு: கோவைத்தம்பி)
"மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருக்கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணிவாசலை
மூடுதல் முறையோ?"
இப்பாடலின் இரண்டாவது சரணத்தில் வரும் வரிகள் இவை:
"பாதை மாறி போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறி போடும்போது
ராகம் தோன்றாது"
- என்ற வரிகளை கவிஞர் எழுதியிருப்பார்.
'சவாலே சமாளி' படத்தில் இடம்பெறும் டீ.எம்.சௌந்திரராஜன்
பாடிய இந்தப் பாடலையும் கேட்டிருப்பீர்கள்.
"நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது
என்னைத் தொடாதே!
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
திருநீலகண்டரின் மனைவி சொன்னது
(நிலவைப் பார்த்து....)
ராகத்தைத் தாளம் தொடாமல் போய்விடில்
பாடலை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தைதன்னையே தாய் தொடாவிடில்
நீயும் இல்லையே நானும் இலையே
நீயும் இல்லையே இங்கு நானும் இல்லையே
(நிலவைப் பார்த்து...)"
எஸ்.பீ.பாலசுப்ரமணியன், எஸ்.ஜானகி இணைந்து பாடியது:
"தாளம் மாறி போடும்போது
ராகம் தோன்றாது"
சௌந்திரராஜன் பாடியது:
"ராகத்தைத் தாளம் தொடாமல் போய்விடில்
பாடலை நெஞ்சம் தொடாமல் போகுமே"
(இந்தப் பாடல் பற்றிய மற்றோர் ஒப்பீடு,
'பாட்டு ஒற்றுமை - 2'-ல் காணலாம்.)
ஆக, ஒரே கருத்தை, இரு கவிஞர்கள்
ராகத்திற்கு ஏற்றபடி வேறு வேறு வார்த்தைகளில்
தந்துள்ளது ரசிக்கும்படி இருக்கின்றதல்லவா?
இரு கவிஞர்களின் பெயர்களையும் தெரிந்தால்
கூறுங்களேன்.
-கலையன்பன்.