இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!


'காதல் கொண்டேன்' படத்தில் ஹரீஷ் ராகவேந்தர்
மற்றும் கங்கா இருவரும் பாடிய இந்தப் பாடலைக்
கேட்டிருப்பீர்கள். (தனுஷ், ஸ்ரீதேவி நடித்த படம்.)


"அழகே பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்
-நீ என் மனைவியாக வேண்டுமென்று,
ஆண்டு பல காத்திருக்க வேண்டுமென்று அவன் சொன்னான்
ஆயுள்வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்"


'கவிதைக்கு பொய் அழகு' என்பார்கள்.
முதலாவதாய் இந்தப் பாடலைப் பாருங்கள்.


பாடல் 1:
"கம்ப்யூட்டர் கொண்டிவளை இந்த பிரம்மன் படைத்தானா?
டெலிஃபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா?
மெல்போர்ன் மலர்போல் மெல்லிய மகளா?
டிஜிட்டலில் செதுக்கிய குறளா?
ஜாகிர் உஸேன் தபலா இவள்தானா?"
(கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா - 'இந்தியன்')


பாடல் 2:
"ஓ பிரம்மா இது தகுமா
இது வரமா இல்லை சாபமா?
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டான்
கண்ணெதிரே கண்ணெதிரே கொடுத்துவிட்டான்"
(விக்ரம், கிரண் - 'ஜெமினி')


பாடல் 3:
"அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றி போனேன்
அடடா அவனே வள்ளலடி"
(பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் - 'ஜீன்ஸ்')


பாடல் 4:
"இது என்ன கூத்து அதிசயமோ
இளநீர் காய்க்கும் கொடி இதுவோ
பருவம் அடைந்தாய் ஒரு பஞ்சம் இல்லை
அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை
நீயே அழகின் எல்லை
நானோ பெண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே"
(முரளி - அனிதா -என்று நினைக்கிறேன் --'புதியவன்')


இப்போது அந்த 'கவிதைக்கு பொய் அழகு' என்று
சொன்னார்களே, அதை நினைத்துக்கொண்டே அடுத்த
வரிகளைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


'அழகே' என்று காதலியை விளித்து, அவளிடம்
'பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்'
என்கிறான் காதலன்.


1. மனு கொடுக்க எந்தக் காதலனாலும் பிரம்மனிடம்
போக முடியுமா?


2. அப்படி போய் 'அந்தக் காதலி மனைவியாக
வேண்டும்' என்ற மனுவை கொடுத்தால், அந்த
மனுவை பிரம்மன் வாங்குவானா?


3. அப்படி வாங்கினால், அந்த மனுவின்மேல் நடவடிக்கை
எடுக்க பிரம்மனால் முடியுமா?


4. மனுவைப் படித்துவிட்டு "ஆண்டு பல காத்திருக்க வேண்டும்"
என்று பதில் தரும் 'பவர்' பிரம்மனுக்கு உண்டா?


5. பிரம்மன் படைப்புக் கடவுள் அல்லவா?
வாழ்வை நிச்சயிக்கும், இருவரின் சேர்க்கையை உறுதிசெய்யும்
எதிர்கால வாக்குறுதியைத் தரும் 'பவர்' பிரம்மனுக்கு உண்டா? 

அட விடுங்கள், இதையெல்லாம் யோசித்து நாம் மூளையை(!)
குழப்பிக் கொள்ள வேண்டாம். பதிவின் தலைப்பான,
"பா. மா. க. 3" குறித்து நமது கருத்தைப் பார்ப்போம். 6. சரி, அப்படியே பிரம்மன் சொன்னதும் வந்துவிடாமல்,
"ஆயுள்வரை காத்திருப்பேன்" என்று ஏன் அந்தக் காதலன்
உளறவேண்டும்? 'ஆயுள்வரை' என்பதை 'இறக்கும்வரை'
என்றும் பொருள் கொள்ளலாம். ஆக இறக்கும்வரை, அதாவது
ஆயுளின் கடைசி நொடிவரை ஏன் அந்தக் காதலன் காத்திருக்க
வேண்டும்? பிரம்மன் சொன்னதுபோல் அண்டு பல காத்திருந்து
இருவரும் சேர்ந்து, மகிழ்ந்து இருக்க வேண்டியதுதானே?
ஆயுளின் கடைசி நொடிவரை காத்திருந்துவிட்டு, அதன்பின்
சேர முடியுமா? அப்படி சேர்வது, சேர்ந்தால் என்ன
சேராவிட்டால் என்ன? அப்படி சேர்வதற்கு அவன் பிரம்மனிடம் போயிருக்கவும் தேவையில்லை; மனு கொடுத்திருக்கவும் தேவையில்லையே?


ஆக, கவிதைக்கு பொய் அழகு என்பார்கள். ஆனால்,
இந்தக் கவிதையே பொய்தான். (ஹப்பா, டைப் செய்து
கை விரலெல்லாம் வலிக்கிறது. இதோடு போதும்.)
ஆகவே, பாட்டை மாத்துங்க கவிஞரையா!

 
"அழகே பிரம்மனிடம் மனு கொடுக்கப் போயிருந்தேன்
-நீ என் மனைவியாக வேண்டுமென்று,
ஆண்டு பல காத்திருக்க வேண்டுமென்று அவன் சொன்னான்
அதுவரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்"

-கலையன்பன்.