Showing posts with label சந்திரபோஸ். Show all posts
Showing posts with label சந்திரபோஸ். Show all posts

Sunday, November 7, 2010

நிலவென்னப் பேசுமோ?



அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

மனதை மயக்கும் திரை பாடல்களைப் பதியும் தளங்கள் பற்பல
இருக்கின்றன.அவற்றைப் படிக்கும்போதும் அதனுடன்
இணைத்துள்ள வீடியோவைக் கேட்கும்போதும்
எனக்கு சில பாடல்கள் நினைவுக்கு வரும். அவற்றை தேடித்  பார்ப்பேன். கிடைக்காமல்
விட்டுவிடுவேன்.

ஒரு கட்டத்தில் அவ்வாறான பாடல்களைப் பதிந்து,
நமது பதிவர்களிடமே அப்பாடல் பற்றிய விவரங்களைக்
கேட்டால் கொடுப்பார்களே என்ற எண்ணம்
தோன்றியதுமே இந்த வலைப்பூவை ஆரம்பித்துவிட்டேன்.
நிறைய பதிவர்கள் பார்த்து  , படித்து, பதிலிட வேண்டும் எண்ணத்தினால்தான் இந்தப் பதிவுகளை திரட்டிகளில் இணைக்கிறேன்.

இனி...

பாடல் 1 : நிலவென்னப் பேசுமோ?
---------------------------------------------------
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின்
இசையில் 'ஆறு புஷ்பங்கள்' படத்தில் இடம்பெற்ற
"ஏண்டி முத்தம்மா" என்ற பாடலைப் பாடிய இசையமைப்பாளர்
சந்திரபோஸ் அவர்கள் பாடியது இந்தப்  பாடல்.

பல்லவி:
நிலவென்னப் பேசுமோ?
இளம் காற்று வீசுமோ?
(இளம் காற்று வீசுதே - என்ற பாடல் நினைவு வருகின்றதா?)
விழியோடு   உறவாடும் மொழி என்ன மௌனமோ ?

சரணம் 1 :
குளிர்காலக் கோடையில்
கொதிக்கின்ற வாடையில்
தளிருக்கு தீ மூட்டும் நியாங்களோ?
கரை ஏறி வாருங்கள்-
இமை சிந்தும் பூக்களே
இரை தேடித் தேடி
இங்கு ஏமாற்றமோ
நிலவென்னப் பேசுமோ
இளம் காற்று வீசுமோ?
விழியோடு உறவாடும் மொழி என்ன மௌனமோ?

சரணம் 2 :
ஒளியில்லை கண்ணுக்குள்
உணர்வில்லை நெஞ்சுக்குள் ...

--இப்படி பாடல் தொடர்கிறது.
நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா? இப்பாடல் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.

பாடல் 2 : சிந்தனை தோன்றி
-------------------------------------------
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடியது. எழுதியவர்
கவிஞர் புரட்சிதாசன். படத்தின் தயாரிப்பாளரும்
அவர்தான் என்று நினைக்கிறேன். சிவாஜி நடித்த
'தராசு' படம் என்று நினைக்கிறேன்.

பாடல் :

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ
வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல

இந்த இரு பாடல்கள் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

நன்றி!

!
Related Posts Plugin for WordPress, Blogger...