Thursday, December 23, 2010

மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

இன்றைய பாடல், திரு.பீ.ஜெயச்சந்திரன் பாடியதாகும்.
காதலியைக் கவருவதற்காக, காதலன் பாடல்கள் பாடுவான்.
அதுபோதெல்லாம் கதாநாயகனுக்காக, பின்னணியில்
குரல் கொடுப்பவன், அவனது நண்பன். 
ஒரு முறை திடீரென்று பாடும்படி கதாநாயகனை, கதாநாயகி
கேட்பாள். கதாநாயகன் என்ன செய்வதென்று தெரியாமல் 
விழிப்பான். அந்த நேரம் அவனது நண்பன் யாருக்கும் தெரியாமல்
பாடலைப் பாட ஆரம்பிப்பான். உடனே கதாநாயகன் வாயசைக்க
ஆரம்பிப்பான்.


இதேபோல் 'அடுத்த வீட்டுப் பெண்' என்ற படத்தில்
'கண்களும் கவி பாடுதே' என்ற பாடல் உண்டு.
இப்போது பாடல்.


பாடல் 9:


மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீவா
காதலின் வெகுமதி கண்களின் அனுமதி
இமைகளை விழிகளைச் சுடுவதுவா நீதி


சரணம் 1 :


உறக்கமில்லை பெண்ணே - இந்த
ஊமை வாழ்க்கை பிடிக்கவில்லை - என்மேல்
இரக்கமில்லை கண்ணே  - இந்த
வாழ்க்கை ஏனோ பிடிக்கவில்லை


-பாடல் இப்படி தொடகின்றது. 


படம் : சாந்தி முகூர்த்தம்
தயாரிப்பு : நடிகை ஸ்ரீப்ரியா 
பாடகர் : பீ.ஜெயச்சந்திரன்


கவிஞர், இசையமைப்பாளர் பெயர்கள் தெரியவில்லை. 
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.


இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

!

Sunday, December 19, 2010

எந்த இரவு முதலிரவு?

இன்றைய பாடல் மெலோடியான, அதே நேரம் சோகமான 
பாடலான "எந்த இரவு முதலிரவு?" என்கின்ற பாடல்.
மேலோடி வகைப் பாடல்கள் மனதை ஊடுருவி சென்று
இதயத்தில் ஒருவகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


அந்த வகையில் இந்தப் பாடலைப் படித்துப் பார்த்தீர்கள்
என்றால், இது ஒரு சோகப் பாடல் என்பதையும், இப்பாடலை 
எஸ்.பீ. பாலசுப்ரமணியம் பாடியிருக்கலாம் என்றும், இது
காதாநாயகன் குடித்துவிட்டுப் பாடுவது போன்ற காட்சி என்றும்,
மனைவியால் மிக மனமுடைந்த கதாநாயகன் தனது உள்ளக் 
குமுறல்களைப் பாடலாய் வெளிப்படுத்துகின்றான் என்பதையும்
நீங்களே உணர்வீர்கள்.
இதுதான் பாடல்:-


பாடல் 8 :
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் எந்த  புரியல
கணவன்   வேஷம் போட்டுக்கிட்டேன் கூத்து நடக்கல - உடன்
நடிக்க வந்த மனைவியவள் கதைய மதிக்கல
எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் எந்த  புரியல


சரணம் :
நூத்துல பத்துதான் காதலில் ஜெயிக்கிறது 
தொண்ணூறு ஜோடிகள் கண்ணீரில் மிதக்குது

நூத்துல.... பத்துதான்.... காதலில்.... ஜெயிக்கிறது 
தொண்ணூறு ஜோடிகள் கண்ணீரில் மிதக்குது


வாழ்ந்தால் இல்லறம் வீழ்ந்தால் போர்க்களம் 
வாழ்ந்தால் இல்லறம் வீழ்ந்தால் போர்க்களம்


வாழ்வதும் வீழ்வதும் வந்தவள் கைவசம்
வாழ்வதும் வீழ்வதும் வந்தவள் கைவசம்


எந்த இரவு முதலிரவு எனக்குத் தெரியல - இதில்
எந்த மனசு எந்த பக்கம் கணக்கும் எந்த  புரியல


சரணம் :
குடும்பம் சொர்க்கமாம் சொன்னவன் யாரடா அவன்?
நரகத்தில் வாழ்ந்திடும் நாயகன் நானடா


குடும்பம் சொர்க்கமாம் சொன்னவன் யாரடாடாடா... அவன்?
நரகத்தில் வாழ்ந்திடும் நாயகன் நானடா


பாடல் தொடர்கின்றது...


பாடியவர் திரு. எஸ். பீ. பாலசுப்ரமணியம் அவர்கள்.
பாடலாசிரியர் திரு. காமகோடியன் என்று எண்ணுகிறேன்.
படம், இசையமைப்பாளர் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா?

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

!

Sunday, December 12, 2010

ரஜினியின் புகழ் பரப்புப் பாடல்!

இன்று பிறந்த நாள் விழா கொண்டாடும் "ஒரே சூப்பர்
ஸ்டார்'  ரஜினி அவர்களுக்கு இந்த கலையன்பனின்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!இன்றைய பாடல், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின்
புகழ் பாடும் பாடல் ஆகும்.
இந்தப் பாடலின் முதல் பகுதி, இந்தியத் தாய் திருநாட்டின்
பெருமைகளைப் பாடுகின்றது. (சிவப்பு நிறம்)
இரண்டாம் பகுதி,  ரஜினி அவர்களை, குட்டிக் குழந்தைகள்
வாழ்த்திப் பாடுவதாக அமைந்துள்ளது. (நீல நிறம்)
தொடர்ந்துவரும் அடுத்த பகுதி, ரஜினி அவர்கள்
வாழ்க்கைத் தத்துவங்களை பாடுவதாகவும்
வி.ரவிச்சந்திரன் அவர்கள் சமுக அவலங்களை
எடுத்துரைப்பதாகவும் அமைந்துள்ளது. (பச்சை நிறம்)


பாடல்  : 7  
[குழுவினர்: எஸ்.பீ .பி. - எஸ்.ஜானகி ] :
என் தாயின் மணிக்கொடியே வாழ்வோடு சங்கமமானவளே!
ஒ...ஒ...ஒ...ஒ... லலாலா லா லலலலா  
உன் மூன்று நிறங்களால் தாய் நாட்டின் மூலங்கள் தந்தவளே!
ஒ...ஒ...ஒ...ஒ... லலாலா லா லலலலா 
இந்து கிறிஸ்து முஸ்லிம் பௌத்தம் சமணம் 
உனது சபையில் ஒன்று அன்றோ?
நாங்கள் உண்ணும் சோறும் பருகும் நீரும் 
அன்னை நீயே தந்ததன்றோ?
நீ வாழ்க தாயே! நீ வெல்க தாயே!
என்றும் எங்கள் கோட்டையில் ஜெயக்கொடி நீதானே!
லாலலலலாலா லலாலாலாலா  
ஒ... ஒ... ஒ... ஒ...

[குழந்தைகள் ] :
ஹலோ ரஜினி மாமா உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா?
நீ என்றும் சூப்பர் ஸ்டார் உன்மேலே பல கண்ணு படலாமா?
மாமா ரஜினி மாமா நாங்கள் உனக்கு திருஷ்டி கழிக்க தேடி வந்தோம்
கையில் தீபம் ஏற்றி சூடம் காட்டி உன்னைப் போற்றி  பாட வந்தோம்
[ரஜினி (எஸ். பீ. பி.) ] :
Thank you மலர்களே! Thank you தளிர்களே!
நான் நன்றி சொல்லவும் தமிழுக்குள் வார்த்தையில்லை!

(ஓஹோ அதனால்தான் Thank you, Thank you-ன்னு இங்கிலிஷ்ல சொல்றிங்களோ ? 
கவிஞரின்  கற்பனை ஓஹோ!)

[குழுவினர் (குழந்தைகள்) ] :
நல்லார்க்கு ரஜினியாம் எங்களுக்கு நல்ல கதை சொல்லு மாமா
அந்தப் பாட்டி கதை வேணாம் நீயாச்சும் புதுக்கதை சொல்லு மாமா

[ரஜினி (எஸ். பீ. பி.) ] :
இந்த வாழ்க்கை நாடகத்தை எழுதியவன் உயரத்தில் இருக்கின்றான்
நான் என்ன பாத்திரமோ கேட்கிறேன் மனதிற்குள் சிரிக்கின்றான்
ஒ... ஒ.. ஒ... ஒ...

[ரவிச்சந்திரன் (எஸ்.பீ. பி.) ] :
எங்கோ தூர  திசையில் சோகக்குரலில் குழந்தை அழுகை கேட்கவில்லையோ
பிள்ளை தாயின் முகத்தை தந்தை முகத்தை உலக சுகத்தைப் பார்க்கவில்லையோ
க்வாஆஆ (குழந்தை அழுகுரல்)
[ஒரு சிறுமி] :
அது யார் அழுகையோ? அது ஏன் அழுகுதோ?

[குழுவினர் (குழந்தைகள்) ] :
அது யார் அழுகையோ? அது ஏன் அழுகுதோ?
[ரவிச்சந்திரன் (எஸ். பீ. பி.) ] :
நம் நாடு எதிர்கொள்ளும் ஆபத்தின் அறிகுறியோ?
அந்தப் பிள்ளை அழுவது புரட்சியின் புது மொழியோ?
க்வாஆஆ (குழந்தை அழுகுரல்)

படத்தின் பெயர் : நாட்டுக்கொரு நல்லவன்
தயாரிப்பு, கதை, இயக்கம் : வி.ரவிச்சந்திரன்
இசை : அம்சலேகா
பாடல்கள்:  கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து.
மேலே உள்ள இந்தப் பாடலை எழுதியவர் முத்துலிங்கமா?
வைரமுத்துவா? என்பது தெரியவில்லை.
இந்தப் பாடல் உங்களுக்குப் பிடிக்குமா? 

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

!

Friday, December 3, 2010

அழகான தங்கச்சியே!!

இந்தப் பாடல் அண்ணன், தங்கை பாசத்தை வெளிப்படுத்தும்
பாடல்! இந்தப் பாடலை இரு அண்ணன்கள், அழுகின்ற தங்கள்
தங்கையை சமாதானப்படுத்துவது போன்ற சூழ்நிலையில்
பாடுவதாக அமைந்துள்ளது.பாடல் - 6  :
அழகான தங்கச்சியே!
அழவேணாம் தங்கச்சியே!
சிரிப்பு எங்கே? - உன் முகத்துல
சிவப்பு எங்கே?
கலங்காதே கரையேத்த ஆளுருக்கு!
நாலு தோளுருக்கு!
காசு பணம் சேர்த்து வைப்போம் உம பேருக்கு!
டங்கு டக்கா டங்கு டக்கா டங்கு டக்கா டட்டாட்டா !
டங்கு டக்கா டங்கு டக்கா டங்கு டக்கா டட்டாட்டா !

-இந்தப் பாடலை பாடிய இரு ஆண் பாடகர்கள் யார், யார்?
எழுதிய கவிஞர் யார்? இசையமைப்பாளர் யார்?
எந்தப் படம்?
உங்களுக்குத் தெரியுமா? சொல்லுங்கள்!

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!


!

Tuesday, November 23, 2010

பூங்காற்று சூடாகும்வேளை!

நன்றி மீண்டும் வருக!

சார், நீங்க எங்கே போறீங்க? நான் உங்களை
சொல்லவில்லை; படத்தின் பெயர்தான் சார்
அது.

                    

இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் மற்றும்
சுஹாசினி இணைந்து நடித்துள்ளனர். இந்தப்
படத்தின் ஒரு ஸ்டில், சாவி இதழின் அட்டையில்
-அதாவது, முன் பின் இரு அட்டையிலும் வெளியானது.
பலபல வண்ண பலூன்களுக்கு  இடையே
பிரதாப் போத்தனும் சுஹாசினியும் சிரித்தபடி
இருக்கும் படம் அது. இப்போது பாடல்.

பாடல் 5:
பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
கா...தல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
நெஞ்சிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
நெஞ்சிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள்... ஹே...

பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு, ஹேய்
பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று...

எஸ். பி. பி., எஸ்.ஜானகி பாடினார்கள் என
எண்ணுகிறேன்.
இந்தப் பாடலை எழுதியவர் யார்? தெரியவில்லை!
பாடலுக்கு இசையமைத்தவர் யார்? தெரியவில்லை!
உங்களுக்குத் தெரியுமா?

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

Friday, November 19, 2010

பூவே நீ யார் சொல்லி யாருக்காக...

பூவே நீ யார் சொல்லி யாருக்காக...!!!
'ஒருதலை ராகம்' என்ற சூப்பர் ஹிட் படத்தைத்
தயாரித்த, தயாரிப்பாளர் (ஈ.எம்.இப்ராஹிம்),
அடுத்து தயாரித்த படம் 'தணியாத தாகம்.'
இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும்
எஸ்.ஜானகி ஆகியோர் பாடிய இந்தப் பாடல்
இனிமையான காதல் மெல்லிசை.

பாடல் 4 :
ஆண்:
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்?
நீ பருவத் தோட்டத்தின் புதுமலர்
நீ பருவத் தோட்டத்தின் புதுமலர்
என்னோட பாடிட வந்த மதுமலர்... மதுமலர்
(பூவே...)

பெண்:
நீ கோயில் கொண்ட அந்த கண்ணனுக்கோ?
நான் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ?
நீ கோயில் கொண்ட அந்த கண்ணனுக்கோ?
நான் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ?
ஆண்:
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பூவுடல் சிவக்கட்டும் என் கரம்பட்டு...
(பூவே...)

இந்தப் பாடலை எழுதியவர் யார்? தெரியவில்லை!
பாடலுக்கு இசையமைத்தவர் யார்? தெரியவில்லை!
உங்களுக்குத் தெரியுமா?

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

!

Monday, November 8, 2010

ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி...

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கலை உலக நாயகன்
கமல்ஹாசனுக்கு இந்த கலையன்பனின் வாழ்த்துக்கள்!
இந்த இடுகை கமல்ஹாசன் பாடிய பாடல்.

பாடல் 3 : ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி...          
படம்: மரியா மை டார்லிங்
பாடியவர்: கமல்ஹாசன்

பாடல்:
ராசாத்தி உன்னப்  பார்க்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி
அடி ரதிதேவி...
அடி ரதிதேவி இன்னும் உனக்கு வெட்கம் என்னடி
முகத்தில் திரை போட்டு  மூடிக் கொண்டு   நாணம் என்னடி
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதிலேது - அட
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதிலேது
ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி

-நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா?
இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி! 


!

Sunday, November 7, 2010

நிலவென்னப் பேசுமோ?அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

மனதை மயக்கும் திரை பாடல்களைப் பதியும் தளங்கள் பற்பல
இருக்கின்றன.அவற்றைப் படிக்கும்போதும் அதனுடன்
இணைத்துள்ள வீடியோவைக் கேட்கும்போதும்
எனக்கு சில பாடல்கள் நினைவுக்கு வரும். அவற்றை தேடித்  பார்ப்பேன். கிடைக்காமல்
விட்டுவிடுவேன்.

ஒரு கட்டத்தில் அவ்வாறான பாடல்களைப் பதிந்து,
நமது பதிவர்களிடமே அப்பாடல் பற்றிய விவரங்களைக்
கேட்டால் கொடுப்பார்களே என்ற எண்ணம்
தோன்றியதுமே இந்த வலைப்பூவை ஆரம்பித்துவிட்டேன்.
நிறைய பதிவர்கள் பார்த்து  , படித்து, பதிலிட வேண்டும் எண்ணத்தினால்தான் இந்தப் பதிவுகளை திரட்டிகளில் இணைக்கிறேன்.

இனி...

பாடல் 1 : நிலவென்னப் பேசுமோ?
---------------------------------------------------
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின்
இசையில் 'ஆறு புஷ்பங்கள்' படத்தில் இடம்பெற்ற
"ஏண்டி முத்தம்மா" என்ற பாடலைப் பாடிய இசையமைப்பாளர்
சந்திரபோஸ் அவர்கள் பாடியது இந்தப்  பாடல்.

பல்லவி:
நிலவென்னப் பேசுமோ?
இளம் காற்று வீசுமோ?
(இளம் காற்று வீசுதே - என்ற பாடல் நினைவு வருகின்றதா?)
விழியோடு   உறவாடும் மொழி என்ன மௌனமோ ?

சரணம் 1 :
குளிர்காலக் கோடையில்
கொதிக்கின்ற வாடையில்
தளிருக்கு தீ மூட்டும் நியாங்களோ?
கரை ஏறி வாருங்கள்-
இமை சிந்தும் பூக்களே
இரை தேடித் தேடி
இங்கு ஏமாற்றமோ
நிலவென்னப் பேசுமோ
இளம் காற்று வீசுமோ?
விழியோடு உறவாடும் மொழி என்ன மௌனமோ?

சரணம் 2 :
ஒளியில்லை கண்ணுக்குள்
உணர்வில்லை நெஞ்சுக்குள் ...

--இப்படி பாடல் தொடர்கிறது.
நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா? இப்பாடல் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.

பாடல் 2 : சிந்தனை தோன்றி
-------------------------------------------
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடியது. எழுதியவர்
கவிஞர் புரட்சிதாசன். படத்தின் தயாரிப்பாளரும்
அவர்தான் என்று நினைக்கிறேன். சிவாஜி நடித்த
'தராசு' படம் என்று நினைக்கிறேன்.

பாடல் :

சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ
வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல

இந்த இரு பாடல்கள் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

நன்றி!

!
Related Posts Plugin for WordPress, Blogger...