Saturday, October 24, 2015

அறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்

அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது!


திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

படம்:  காதல் ஜோதி.
பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்தராஜன்.
பாடலாசிரியர்: பேரறிஞர் அண்ணா அவர்கள்.

நடிகர் இரவிச்சந்திரனுக்கு, கோவிந்தராஜனின் குரல் ஏகப் பொருத்தம்!

இதோ பாடல்:

பல்லவி:

ஓஓ ...
உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமாச் சொல்லுறெண்டி தங்க ரத்தினமே
தாள முடியாது கண்ணே  பொண்ணு ரத்தினமே

உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமாச் சொல்லுறெண்டி தங்க ரத்தினமே
தாள முடியாது கண்ணே  பொண்ணு ரத்தினமே

ஏ தங்க ரத்தினம் பொண்ணு ரத்தினம்
தங்க ரத்தினம் பொண்ணு ரத்தினம்
உன் மேல கொண்ட ஆச...

சரணம் 1:

சித்திரைக்கு பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசி போல்
சித்திரைக்கு பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசி போல்
முத்தழகி நீயும் நானும் தங்க ரத்தினமே
மூணு முடிச்சுபோட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே

நேத்து நீ போட்ட கோலம் நீர்கோலம் ஆகிபோச்சு
மாக்கோலம் போட்டுக்கலாம் தங்க ரத்தினமே
என்னை மச்சான்னு கூப்பிடம்மா பொண்ணு ரத்தினமே
ஏ தங்கம் ஏ பொண்ணு ஏ தங்கம் ஏ பொண்ணு

உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமாச் சொல்லுறெண்டி தங்க ரத்தினமே
தாள முடியாது கண்ணே  பொண்ணு ரத்தினமே
உன் மேல கொண்ட ஆச...

சரணம் 2:

ஈரோட்டு சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்
ஈரோட்டு சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்
காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்க ரத்தினமே
தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே
ஈரோட்டு சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்
காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்க ரத்தினமே

தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே

கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாக போக வேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணை இருப்பேன்  பொண்ணு ரத்தினமே
கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன
கதையாக போக வேண்டாம் தங்க ரத்தினமே
நானே கதவாக துணை இருப்பேன்  பொண்ணு ரத்தினமே
ஏ தங்கம் ஏ பொண்ணு ஏ தங்கம் ஏ பொண்ணு

உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு
சத்தியமாச் சொல்லுறெண்டி தங்க ரத்தினமே
தாள முடியாது கண்ணே  பொண்ணு ரத்தினமே

* கேட்க, கேட்க திகட்டாத பாடல்!
கேட்போம் வாருங்கள்!


நன்றி!     

8 comments:

'பரிவை' சே.குமார் said...

அண்ணா அவர்களின் பாடலை இப்போதுதான் கேட்கிறேன்...
அருமையான பாடல்... பகிர்வுக்கு நன்றி.

கலையன்பன் said...

வருகை தந்து...
கருத்தளித்து...
நன்றி தெரிவித்தமைக்கு...
நன்றி நண்பரே!

Unknown said...

சினிமாவுக்கு ஏற்ற மொக்கை பாட்டு :)

Nagendra Bharathi said...

அருமை

கலையன்பன் said...

@ Bagawanjee...

வருகைக்கு, கருத்துரைக்கு நன்றி!

இருந்தாலும் காதலியிடம் உன் பாதுகாப்புக்காக நான் இருக்கிறேன் என்று
காதலன் ஆறுதல் தரும் கருத்தமைந்த பாடல் அல்லவா?

கலையன்பன் said...

@Nagendra Bharathi...


வருகை தந்து , கருத்தளித்தமைக்கு நன்றி!

சீராளன்.வீ said...

அடடா எவ்வளவு இனிமையான பாடல் ! சீர்காழி கோவிந்தராஜன் பக்திப் பாடல்கள் நிறையக் கேட்டு இருக்கிறேன் இதுதான் முதல் திரையிசைப் பாடல் அருமை அருமை பகிர்வுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் !

கலையன்பன் said...

@ சீராளன்.வீ ...

தங்கள் முதல் வருகைக்கு நன்றி!

இனிமையாய் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...