பாட்டு ஒற்றுமை - 4
காதலன் கனவில் காதலியும் காதலி கனவில்
காதலனும் வருவது இயல்பு. (சிலருக்கு அவர்களின்
கனவுக்கன்னிக் கதாநாயகி வருவாள்.)
சூர்யா கதாநாயகனாக நடித்த 'வாரணம் ஆயிரம்'
என்கிற படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்:
"இவள் என்ன என்ன தேடிவந்த அஞ்சல"
பின்வரும் இந்த வரியைக் கவனித்திருக்கிறீர்களா?
"படுத்தா தூக்கமும் இல்ல கனவுல தொல்ல"
எஸ்.பீ.பாலசுப்ரமணியன் மற்றும் எஸ்.ஜானகி பாடும்
"சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே"
என்கிற பாடல். இந்தப் பாடலில் காதலன் பாடும்
இந்த வரியைப் பாருங்கள்:
"சொப்பனத்தில் என்றும் உன் உருவம்"
சந்திரபாபு அவர்கள் பாடிய காலத்தால் அழியாத
தத்துவப் பாடல் இது:
"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை"
இப்பாடலில் ஒரு சரணம்:
"கனவு காணும் மனிதனுக்கு
காண்பதெல்லாம் கனவு அவன்
காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
இவன் கனவில் அவள் வருவாள்
இவனைப் பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்
யாரைப் பார்த்து அழைப்பாள்"
இதில் "இவன் கனவில் அவள் வருவாள்"
என்கிற வரியை ரசித்தீர்களா?
பாரதிராஜா இயக்கிய ஏ.வி.எம்.தயாரித்த புதுமைப்பெண்
படத்தில் பீ.ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா பாடியது
இந்தப் பாடல்:
"இது ஒரு காதல் மயக்கம்"
இதில் காதலனும் காதலியும் பாடும் இந்த சரணத்தையும்
கவனியுங்கள்:
காதலன்: "நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை"
காதலி : "நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை"
காதலன்: "மெய்யா பொய்யா?"
காதலி : "மெய்தான் ஐயா!"
ஆக, காதலர்கள் சிலருக்கு கனவில் காதலனோ,
காதலியோ வருகிறார்கள். சிலருக்கு கனவுகள்
வருகின்றன.(காதலன், காதலி வருவார்களா எனத்
தெரியவில்லை.) சிலருக்கு கனவே வருவதில்லை.
எனவே, அனைத்துப் பாடல்களிலும் காதலர்களும்
கனவும் இணைந்து வருகின்றன(ர்).
ஒவ்வொரு கவிஞரும் தத்தமது கற்பனையைக் கொண்டு
ராகத்திற்கு ஏற்றபடி வேறு வேறு வார்த்தைகளில்
தந்துள்ளது ரசிக்கும்படி இருக்கின்றதல்லவா?
கவிஞர்களின் பெயர்களையும் தெரிந்தால்
கூறுங்களேன்.
-கலையன்பன்.
*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*

6 comments:
முதல் பாடல் அதிகம் கேட்டதில்லை...
இரண்டாவது பாடல் விரும்பிக் கேட்கும் பாடலில் ஒன்று...
பாட்டுகளின் வார்த்தைகள் வேறு. பொருள் ஒன்றுதான். திரைக்கதைகளில் கூட இப்படிதான். பாடல்களில் கொஞ்சம் வார்த்தைகளை மாற்றுகிறார்கள். திரைக்கதைகளில் கதை ஒன்றுதான். சில சீன்ஸ் / வசனங்கள் மட்டும் மாற்றிவிடுகிறார்கள்.
ஆனால் ஒரே வரிகளை இரண்டு பாடல்களிலேயே கவிஞர்கள் உபயோகித்திருக்கிறார்கள். (காப்பி அடிப்பது என்பது வேறு)
வரிகள்: விழிமலரம்பு வீசியபின்பு
இடம் பெற்ற பாடல்களும் திரைப்படங்களும்:
1. பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்: பணம் படைத்தவன்
2. நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட - பொம்மலாட்டம்
நீங்கள் கொடுத்திருக்கும் பாடல்களும் அவை இடம் பெற்ற படங்களும்; எழுதிய கவிஞர்களும்
1. அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல - வாரணம் ஆயிரம் - கவிஞர்; தாமரை
2. சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே: - காவல் கீதம் - கவிஞர் வாலி
3. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. - அன்னை - கவிஞர் கண்ணதாசன்
4. காதல் மயக்கம் - புதுமைப் பெண் - கவிஞர் வாலி
ada...
nalla pakirvu...
@ சே. குமார் ...
கருத்திட்டமைக்கு நன்றிங்க...
//Ramarao said...
பாட்டுகளின் வார்த்தைகள் வேறு. பொருள் ஒன்றுதான். திரைக்கதைகளில் கூட இப்படிதான். பாடல்களில் கொஞ்சம் வார்த்தைகளை மாற்றுகிறார்கள். திரைக்கதைகளில் கதை ஒன்றுதான். சில சீன்ஸ் / வசனங்கள் மட்டும் மாற்றிவிடுகிறார்கள். //
ஐயா,
பல தகவல்களுடன் கவிஞர்களின் பெயர்களையும்
தெரிவித்தமைக்கு நன்றி!
@ Seeni ...
கருத்துக்கு நன்றி!
Post a Comment