Saturday, November 30, 2013

பாட்டு ஒற்றுமை - 6

Sri-divya-half-saree-Varutha-Padatha-Valibar-Sangham-movie


வேடன் படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
[எஸ்.பீ.பாலசுப்ரமணியம், எஸ்.சித்ரா பாடியது.]


"அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவே இப்ப என்ன பண்ணுவ?
கம்மா கரையில சும்மா நான் இருந்தா என்ன பண்ணுவ?
தப்பிக்க நினச்சி தண்ணியில குதிச்சா என்ன பண்ணுவ?
நானும் குதிச்சா என்ன பண்ணுவ?"


இதே டைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னே ஒரு திரைப் பாடல் வந்துள்ளது. அது இதுதான்:

ஆண்: ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் நாடு சாமத்திலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் நாடு சாமத்திலே


பெண்: ஊரார் உறங்கும்போது உற்றாரும் தூங்கும்போது
நல்ல பாம்பு வேடங் கொண்டு நடுச்சாமம் நீ வந்தாயானால்
ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் பறந்திடுவேனே

ஆண்: ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் நீ பறந்தாயானால்
ஊர்க் குருவி வேடங் கொண்டு உயரத்தில் நீ பறந்தாயானால்
செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன்

பெண்: செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
செம்பருந்து வேடங் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால்
பூமியைத் தேடியல்லோ புல்லாய் முளைத்திடுவேன்

ஆண்: பூமியைத் தேடியல்லோ புல்லாய் நீ  முளைத்தாயானால்
பூமியைத் தேடியல்லோ புல்லாய் நீ  முளைத்தாயானால்
காராம்பசு வேடங் கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை

பெண்: காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
காராம்பசு நீயானால் கழுத்துமணி நானாவேன்
ஆல மரத்தடியில் அரளிச் செடி ஆவேன்
ஆல மரத்தடியில் அரளிச் செடி ஆவேன்

ஆண்: ஆல மரமுறங்க அடி மரத்தில் நீ உறங்க
உன் மடியில் நான் உறங்க என்ன தவம்செய்தேனோ?

ஆண் + பெண்: ஆஆஅ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ...... 

இந்த சுவை மிகுந்த பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர்,
கவிஞர், பாடகர்கள் பெயர்கள் உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.


இந்த இரு பாடல்களையும்  ஒப்பிட்டுப் பார்த்து ரசித்தீர்களா?
நன்றி!

 
- கலையன்பன்.
***உங்கள் கருத்துரைகளை வழங்குங்கள் நண்பர்களே!*** 

10 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான பாடல் ஒற்றுமை....
ஸ்ரீதிவ்யா படமும் அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

Ramarao said...

"ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே"
இந்த பாடல் முன்பெல்லாம் அடிக்கடி இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும்.

பாடல் இடம் பெற்ற திரைப்படம்: நாலு வேலி நிலம்
படம் வெளி வந்த வருடம்:
இசையமைத்தவர்: K.V.மகாதேவன்
கவிஞர்: கு.மா.பாலசுப்ரமண்யம்
பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் & எல்.ஆர்.ஈஸ்வரி .

கலையன்பன் said...

...சே. குமார் ...

நண்பரே... அருமைன்னு சொன்னதற்கும்
ஸ்ரீ திவ்யாவின் படத்தைப் பாராட்டியதற்கும் நன்றி!

கலையன்பன் said...

...திண்டுக்கல் தனபாலன் ...

நண்பரே...
தங்கள் வாழ்த்துக்களுக்காக தங்களுக்கும் எனது நன்றி!

கலையன்பன் said...

...Ramarao said...
"ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே"
இந்த பாடல் முன்பெல்லாம் அடிக்கடி இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும்.

பாடல் இடம் பெற்ற திரைப்படம்: நாலு வேலி நிலம்
படம் வெளி வந்த வருடம்:
இசையமைத்தவர்: K.V.மகாதேவன்
கவிஞர்: கு.மா.பாலசுப்ரமண்யம்
பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் & எல்.ஆர்.ஈஸ்வரி ....

=>>> நானும் இந்தப் பாடல் இலங்கை வானொலியில்தான் கேட்டிருக்கிறேன்.

படம் 'நாலு வேலி நிலம்' என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
'நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்'
- என்ற பாடல் இடம்பெற்றது இந்தப் படம்தானா?
விவரம் ப்ளீஸ்.
படம் வெளியான ஆண்டு எது சார்?

நீண்ட விளக்கத்திற்கு நன்றி!!!

Ramarao said...

நாலு வேலி நிலம் திரைப்படம் வெளிவந்த வருடம்: 1959.

இந்த திரைப்படத்தில் பல நல்ல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

"நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு" பாடல் இடம் பெற்ற திரைப்படம் இதே திரைப்படம் தான்.
"வள்ளலார் இயற்றிய இந்த பாடலை பாடியவர்கள் A.L.ராகவன் & ஆண்டாள்

இன்னொரு இனிமையான பாடல்:.
"இன்பக் கவிதை பாடுது; அன்புக் கதைகள் பேசுது
கொஞ்சும் பருவக் கிளிகள்
அருவிக் கரையில் இனிமை தேடுது"
சிதம்பரம் ஜெயராமன் & S.ஜானகி பாடியது.

கலையன்பன் said...

...Ramarao said...
நாலு வேலி நிலம் திரைப்படம் வெளிவந்த வருடம்: 1959.

இந்த திரைப்படத்தில் பல நல்ல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

"நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு" பாடல் இடம் பெற்ற திரைப்படம் இதே திரைப்படம் தான்.
"வள்ளலார் இயற்றிய இந்த பாடலை பாடியவர்கள் A.L.ராகவன் & ஆண்டாள் ....

=>> மறு வருகை தந்து... பல நல்ல பாடல்களை அறிமுகம் செய்தீர்கள். நன்றி சார்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கலையன்பன் said...

...திண்டுக்கல் தனபாலன் ...

வருகை தந்து, தகவல் தந்தமைக்கு நன்றி சார்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...