Friday, November 19, 2010

பூவே நீ யார் சொல்லி யாருக்காக...

பூவே நீ யார் சொல்லி யாருக்காக...!!!




'ஒருதலை ராகம்' என்ற சூப்பர் ஹிட் படத்தைத்
தயாரித்த, தயாரிப்பாளர் (ஈ.எம்.இப்ராஹிம்),
அடுத்து தயாரித்த படம் 'தணியாத தாகம்.'
இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும்
எஸ்.ஜானகி ஆகியோர் பாடிய இந்தப் பாடல்
இனிமையான காதல் மெல்லிசை.

பாடல் 4 :
ஆண்:
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்?
நீ பருவத் தோட்டத்தின் புதுமலர்
நீ பருவத் தோட்டத்தின் புதுமலர்
என்னோட பாடிட வந்த மதுமலர்... மதுமலர்
(பூவே...)

பெண்:
நீ கோயில் கொண்ட அந்த கண்ணனுக்கோ?
நான் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ?
நீ கோயில் கொண்ட அந்த கண்ணனுக்கோ?
நான் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ?
ஆண்:
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பூவுடல் சிவக்கட்டும் என் கரம்பட்டு...
(பூவே...)

இந்தப் பாடலை எழுதியவர் யார்? தெரியவில்லை!
பாடலுக்கு இசையமைத்தவர் யார்? தெரியவில்லை!
உங்களுக்குத் தெரியுமா?

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

!

16 comments:

R. Gopi said...

பாடல் நன்றாக உள்ளது. ஆனால் நீங்கள் கேட்கும் கேளிவிகளுக்கு விடை தெரியவில்லை

THOPPITHOPPI said...

அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் யார்?

r.v.saravanan said...

படம் கேள்விபட்டிருக்கிறேன் பாட்டு கேட்டதில்லை கலையன்பன்

கலையன்பன் said...

Gopi Ramamoorthy said...


விடை தெரியாவிட்டாலும் பரவாயில்லை.
கருத்துரை அளித்ததற்கு நன்றி....Gopi!

கலையன்பன் said...

//THOPPITHOPPI said...
அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் யார்?//


ஆஹா... THOPPITHOPPI!
நான் உங்களிடம் கேள்வி கேட்டால் நீங்கள்
மறு கேள்வி என்னிடம் திருப்பிக்
கேட்கிறீர்களே...!
'யாதுமாகி நின்றாய்' என்ற படத்தில் இடம்
பெற்ற ஸ்டில் அது.

கலையன்பன் said...

r.v.saravanan said...

கருத்துரை அளித்ததற்கு நன்றி....r.v.saravanan!

Sitrodai said...

If I am not wrong, the music was composed by A.K. Raj

- Sitrodai

கலையன்பன் said...

Sitrodai said...

நண்பர் சிற்றோடை! தங்கள் தகவலுக்கு நன்றி!
ஏ.கே.ராஜ், நான் இசையமப்பாளர் பெயர்
கேள்விப்பட்டிருக்கின்றேன். மேலும் இவர்
இசையமைத்த படங்கள் விவரம் தர இயலுமா?

கவிஞர் பெயர்கூட 'உமா நாகபூஷணம்' என்று
கேள்வி. ஆனால், சரியாகத் தெரியவில்லை.

Sitrodai said...

tfmpage.com அல்லது dhool.com தளத்தில் தேடவும். அதில் விவரங்கள் இருக்கலாம்.

கலையன்பன் said...

Sitrodai said...

நன்றி சிற்றோடை, தகவலுக்கு!
தங்களைப் பற்றிய ப்ரொஃபைல்
விவரங்கள் எதுவும் இல்லையே?

ம.தி.சுதா said...

அருமையான பார்வை வாழ்த்துக்கள்...

கலையன்பன் said...

@ம.தி.சுதா

கருத்திற்கு நன்றி, நண்பரே!

கலையன்பன் said...

//கவிஞர் பெயர்கூட 'உமா நாகபூஷணம்' என்று
கேள்வி. ஆனால், சரியாகத் தெரியவில்லை.
November 23, 2010 10:05 PM //

Sitrodai அவர்களின் கமெண்டுக்கு
பதிலிடும்போது நான் குறிப்பிட்டதுபோலவே
கவிஞரின் பெயர் 'உமா நாகபூஷணம்'
என்பது சரியே!

ஆனால், நான் நினைத்தது இது ஓர் ஆண்
கவிஞர் என்று. குமுததில் லைட்ஸ் ஆன்
சுனில் சொகிறார், இவர் ஒரு பெண் கவிஞர்
என்று.

(ஆதாரம்: இன்றைய 02.02.2011 குமுதம்
லைட்ஸ் ஆன் பக்கம் 38.)

Anonymous said...

Music Director A.A.Raj

Anonymous said...

http://www.jeyamohan.in/?p=43064

Unknown said...

பாடலை இயற்றியவர் உமா நாகபூசணம்
இசை ஏ ஏ ராஜ் [இவர் ஒரு தலைராகம் பலத்திற்கு த ராஜெந்தரோடு சேர்ந்து இசையமைத்தவர் ,மலையாள இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹுமானின் தந்தை சேகர் அவர்களின் நல்ல நண்பன் ]
இயக்கம் ஈ எம் இப்ராஹிம் டெல்லி கணேஷ் குருஷங்கர் சொர்ணா நடித்தது
1982 10 08 அன்று வெளியானது

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...