Sunday, November 7, 2010
நிலவென்னப் பேசுமோ?
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
மனதை மயக்கும் திரை பாடல்களைப் பதியும் தளங்கள் பற்பல
இருக்கின்றன.அவற்றைப் படிக்கும்போதும் அதனுடன்
இணைத்துள்ள வீடியோவைக் கேட்கும்போதும்
எனக்கு சில பாடல்கள் நினைவுக்கு வரும். அவற்றை தேடித் பார்ப்பேன். கிடைக்காமல்
விட்டுவிடுவேன்.
ஒரு கட்டத்தில் அவ்வாறான பாடல்களைப் பதிந்து,
நமது பதிவர்களிடமே அப்பாடல் பற்றிய விவரங்களைக்
கேட்டால் கொடுப்பார்களே என்ற எண்ணம்
தோன்றியதுமே இந்த வலைப்பூவை ஆரம்பித்துவிட்டேன்.
நிறைய பதிவர்கள் பார்த்து , படித்து, பதிலிட வேண்டும் எண்ணத்தினால்தான் இந்தப் பதிவுகளை திரட்டிகளில் இணைக்கிறேன்.
இனி...
பாடல் 1 : நிலவென்னப் பேசுமோ?
---------------------------------------------------
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின்
இசையில் 'ஆறு புஷ்பங்கள்' படத்தில் இடம்பெற்ற
"ஏண்டி முத்தம்மா" என்ற பாடலைப் பாடிய இசையமைப்பாளர்
சந்திரபோஸ் அவர்கள் பாடியது இந்தப் பாடல்.
பல்லவி:
நிலவென்னப் பேசுமோ?
இளம் காற்று வீசுமோ?
(இளம் காற்று வீசுதே - என்ற பாடல் நினைவு வருகின்றதா?)
விழியோடு உறவாடும் மொழி என்ன மௌனமோ ?
சரணம் 1 :
குளிர்காலக் கோடையில்
கொதிக்கின்ற வாடையில்
தளிருக்கு தீ மூட்டும் நியாங்களோ?
கரை ஏறி வாருங்கள்-
இமை சிந்தும் பூக்களே
இரை தேடித் தேடி
இங்கு ஏமாற்றமோ
நிலவென்னப் பேசுமோ
இளம் காற்று வீசுமோ?
விழியோடு உறவாடும் மொழி என்ன மௌனமோ?
சரணம் 2 :
ஒளியில்லை கண்ணுக்குள்
உணர்வில்லை நெஞ்சுக்குள் ...
--இப்படி பாடல் தொடர்கிறது.
நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா? இப்பாடல் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.
பாடல் 2 : சிந்தனை தோன்றி
-------------------------------------------
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பாடியது. எழுதியவர்
கவிஞர் புரட்சிதாசன். படத்தின் தயாரிப்பாளரும்
அவர்தான் என்று நினைக்கிறேன். சிவாஜி நடித்த
'தராசு' படம் என்று நினைக்கிறேன்.
பாடல் :
சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ
வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
இந்த இரு பாடல்கள் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
நன்றி!
!
Labels:
சந்திரபோஸ்,
சிந்தனை தோன்றி,
நிலவென்னப் பேசுமோ,
புரட்சிதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
'''ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல்''''
நல்ல சாவற்ற பாடல்களை தேடிப் பெற்றுள்ளிர்கள் வாழ்த்துக்கள்... தங்கள் பயணம் தொடரட்டும்.. என்வரவும் வாக்கும் கட்டாயம் இருக்கும்...
பதிவுலகத்துக்கு நல்ல ஒரு சிந்தனையோடு அடியெடுத்து வைத்துள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
”ஒளியில்லை கண்ணுக்குள்
உணர்வில்லை நெஞ்சுக்குள்”
“சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ
வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல”
அருமையான சிந்திக்க வைக்கக்கூடிய வரிகள்...
இதுபோன்ற அரிய நல்ல வரிகளையுடைய பாடல்களை தேடி தொகுத்து எழுதவும்
நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்...
பகிர்ந்தமைக்கு நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
மாணவன்
//வாழ்த்துக்கள்... தங்கள் பயணம் தொடரட்டும்.. என்வரவும் வாக்கும் கட்டாயம் இருக்கும்... //
வாழ்த்துக்களுக்கும் தங்களின் ஆதரவிற்கும்
மனமார்ந்த நன்றிகள் ம.தி.சுதா!
//இதுபோன்ற அரிய நல்ல வரிகளையுடைய பாடல்களை தேடி தொகுத்து எழுதவும்
நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்...//
இன்னும் பல வித்தியாசமான பாடல்கள்
தொடர்ந்து தர இருக்கிறேன்.
தங்களின் வரவேற்பான கருத்திற்கும்
தங்களின் ஆதரவிற்கும்
மனமார்ந்த நன்றிகள் மாணவன்!
வாழ்த்துக்கள்... தங்கள் பயணம் தொடரட்டும்
எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்...
வாழ்த்துக்கள்... தங்கள் பயணம் தொடரட்டும்
//எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்... //
நன்றி பிரஷா! எனது வலைப்பூவில் இணைந்துகொண்டதற்கு நன்றி!
நன்றி r.v.saravanan ! எனது வலைப்பூவில் இணைந்துகொண்டதற்கு நன்றி!
அன்பர் கலையன்பன் அவர்களுக்கு, தாங்கள் எனது வலைத்தளத்திற்கு வந்ததும் கருத்துகளை பதிந்ததற்கும் மிக்க நன்றி...
தங்களது வளைத்தளத்தை கண்டேன்... அருமையாக இருக்கிறது...
தங்களது அருமையான முயற்சிக்கு மிக்க நன்றி.....
வாழ்துக்களுடன்
மதுரை அருண் குமார்
அன்பர் கலையன்பன் அவர்களுக்கு, தாங்கள் எனது வலைத்தளத்திற்கு வந்ததும் கருத்துகளை பதிந்ததற்கும் மிக்க நன்றி...
தங்களது வளைத்தளத்தை கண்டேன்... அருமையாக இருக்கிறது...
தங்களது அருமையான முயற்சிக்கு மிக்க நன்றி.....
வாழ்துக்களுடன்
மதுரை அருண் குமார்
http://www.maduraispb.blogspot.com/
//Arun Kumar N said... //
மதுரை அருண் குமார்!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
மிக்க நன்றி!
வித்தியாசமான முயற்சிக்கும் என் வாழ்த்துக்களூம் சேரட்டும். வாழ்க வளர்க உங்கள் பணி.
வாழ்த்துக்கள்..
//Covai Ravee said...
வித்தியாசமான முயற்சிக்கும் என் வாழ்த்துக்களூம் சேரட்டும். வாழ்க வளர்க உங்கள் பணி.//
//Covai Ravee said...
வாழ்த்துக்கள்.. //
தங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு
மிக்க நன்றி, Covai Ravee!
Post a Comment