நன்றி மீண்டும் வருக!
சார், நீங்க எங்கே போறீங்க? நான் உங்களை
சொல்லவில்லை; படத்தின் பெயர்தான் சார்
அது.
இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் மற்றும்
சுஹாசினி இணைந்து நடித்துள்ளனர். இந்தப்
படத்தின் ஒரு ஸ்டில், சாவி இதழின் அட்டையில்
-அதாவது, முன் பின் இரு அட்டையிலும் வெளியானது.
பலபல வண்ண பலூன்களுக்கு இடையே
பிரதாப் போத்தனும் சுஹாசினியும் சிரித்தபடி
இருக்கும் படம் அது. இப்போது பாடல்.
பாடல் 5:
பூங்காற்று சூடாகும் வேளை
சொர்க்கங்கள் போகும் நம் பாதை
ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை
கா...தல் கனவுகளே
நீராடும் என் நினைவுகளே
நெஞ்சிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
நெஞ்சிலே காதல் சுமந்தவள்
தன்னையே இன்று மறந்தவள்
மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள்... ஹே...
பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு, ஹேய்
பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று...
எஸ். பி. பி., எஸ்.ஜானகி பாடினார்கள் என
எண்ணுகிறேன்.
இந்தப் பாடலை எழுதியவர் யார்? தெரியவில்லை!
பாடலுக்கு இசையமைத்தவர் யார்? தெரியவில்லை!
உங்களுக்குத் தெரியுமா?
இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!
8 comments:
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா.
நானம் இப்போ தான் கேள்விப்படுகிறேன்...
ம.தி.சுதா said...
*: சரி, சாப்பிட்டு வாருங்கள்!
ம.தி.சுதா said...
*: பரவாயில்லை, அடுத்த பாடல் தெரிந்தால்
சொல்லுங்கள், நண்பரே!
எனக்கு சுஹாசினியிடம் பிடித்தது ஆபாசம் இல்லாமல் நடித்து போனது.
//THOPPITHOPPI said...//
உண்மைதான்; சரியாகச் சொன்னீர்கள்.
கருத்திற்கு நன்றி, THOPPITHOPPI!
கலையன்பன் தெரியலை
r.v.saravanan said...
நன்றி r.v.saravanan!
தொடர்ந்து (வந்து) கருத்து கூறுங்கள்!!
Post a Comment