Thursday, December 23, 2010

மௌனமே மௌனமே என்னுடன் பாடவா

இன்றைய பாடல், திரு.பீ.ஜெயச்சந்திரன் பாடியதாகும்.
காதலியைக் கவருவதற்காக, காதலன் பாடல்கள் பாடுவான்.
அதுபோதெல்லாம் கதாநாயகனுக்காக, பின்னணியில்
குரல் கொடுப்பவன், அவனது நண்பன். 
ஒரு முறை திடீரென்று பாடும்படி கதாநாயகனை, கதாநாயகி
கேட்பாள். கதாநாயகன் என்ன செய்வதென்று தெரியாமல் 
விழிப்பான். அந்த நேரம் அவனது நண்பன் யாருக்கும் தெரியாமல்
பாடலைப் பாட ஆரம்பிப்பான். உடனே கதாநாயகன் வாயசைக்க
ஆரம்பிப்பான்.






இதேபோல் 'அடுத்த வீட்டுப் பெண்' என்ற படத்தில்
'கண்களும் கவி பாடுதே' என்ற பாடல் உண்டு.
இப்போது பாடல்.


பாடல் 9:


மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீவா
காதலின் வெகுமதி கண்களின் அனுமதி
இமைகளை விழிகளைச் சுடுவதுவா நீதி


சரணம் 1 :


உறக்கமில்லை பெண்ணே - இந்த
ஊமை வாழ்க்கை பிடிக்கவில்லை - என்மேல்
இரக்கமில்லை கண்ணே  - இந்த
வாழ்க்கை ஏனோ பிடிக்கவில்லை


-பாடல் இப்படி தொடகின்றது. 


படம் : சாந்தி முகூர்த்தம்
தயாரிப்பு : நடிகை ஸ்ரீப்ரியா 
பாடகர் : பீ.ஜெயச்சந்திரன்


கவிஞர், இசையமைப்பாளர் பெயர்கள் தெரியவில்லை. 
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.


இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

!

8 comments:

கலையன்பன் said...

@வெங்கட் நாகராஜ் ...

தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி! தொடர்ந்து தங்கள் கருத்துக்களை
எதிர்பார்க்கிறேன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை தொடருங்கள் ..வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

நல்ல பகிர்வு. நன்றி தொடருங்கள்

கலையன்பன் said...

@பிரஷா...
தங்கள் வருகைக்கு மற்றும் கருத்திற்கு நன்றி!
தொடர்ந்து வந்து கருத்து தாருங்கள்.

கலையன்பன் said...

@r.v.saravanan ...
தங்கள் வருகைக்கு மற்றும் கருத்திற்கு நன்றி!
தொடர்ந்து வந்து கருத்து தாருங்கள்.

'பரிவை' சே.குமார் said...

nalla padal arimugam... ini atikkati varuvean....

கலையன்பன் said...

@ சே.குமார் ...

தங்கள் கருத்திற்கு நன்றி!
தொடர்ந்து வர இசைந்ததற்கு நன்றி!
முடிந்தால் மற்ற எட்டு பாடல்களையும்
படித்து விடுங்களேன்.

கலையன்பன் said...

@ ரஹீம் கஸாலி ...

நன்றிங்க... கஸாலி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...