Sunday, December 12, 2010

ரஜினியின் புகழ் பரப்புப் பாடல்!

இன்று பிறந்த நாள் விழா கொண்டாடும் "ஒரே சூப்பர்
ஸ்டார்'  ரஜினி அவர்களுக்கு இந்த கலையன்பனின்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!



இன்றைய பாடல், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின்
புகழ் பாடும் பாடல் ஆகும்.
இந்தப் பாடலின் முதல் பகுதி, இந்தியத் தாய் திருநாட்டின்
பெருமைகளைப் பாடுகின்றது. (சிவப்பு நிறம்)
இரண்டாம் பகுதி,  ரஜினி அவர்களை, குட்டிக் குழந்தைகள்
வாழ்த்திப் பாடுவதாக அமைந்துள்ளது. (நீல நிறம்)
தொடர்ந்துவரும் அடுத்த பகுதி, ரஜினி அவர்கள்
வாழ்க்கைத் தத்துவங்களை பாடுவதாகவும்
வி.ரவிச்சந்திரன் அவர்கள் சமுக அவலங்களை
எடுத்துரைப்பதாகவும் அமைந்துள்ளது. (பச்சை நிறம்)


பாடல்  : 7  
[குழுவினர்: எஸ்.பீ .பி. - எஸ்.ஜானகி ] :
என் தாயின் மணிக்கொடியே வாழ்வோடு சங்கமமானவளே!
ஒ...ஒ...ஒ...ஒ... லலாலா லா லலலலா  
உன் மூன்று நிறங்களால் தாய் நாட்டின் மூலங்கள் தந்தவளே!
ஒ...ஒ...ஒ...ஒ... லலாலா லா லலலலா 
இந்து கிறிஸ்து முஸ்லிம் பௌத்தம் சமணம் 
உனது சபையில் ஒன்று அன்றோ?
நாங்கள் உண்ணும் சோறும் பருகும் நீரும் 
அன்னை நீயே தந்ததன்றோ?
நீ வாழ்க தாயே! நீ வெல்க தாயே!
என்றும் எங்கள் கோட்டையில் ஜெயக்கொடி நீதானே!
லாலலலலாலா லலாலாலாலா  
ஒ... ஒ... ஒ... ஒ...

[குழந்தைகள் ] :
ஹலோ ரஜினி மாமா உன்னோடு வாழ்த்துக்கள் சொல்லலாமா?
நீ என்றும் சூப்பர் ஸ்டார் உன்மேலே பல கண்ணு படலாமா?
மாமா ரஜினி மாமா நாங்கள் உனக்கு திருஷ்டி கழிக்க தேடி வந்தோம்
கையில் தீபம் ஏற்றி சூடம் காட்டி உன்னைப் போற்றி  பாட வந்தோம்
[ரஜினி (எஸ். பீ. பி.) ] :
Thank you மலர்களே! Thank you தளிர்களே!
நான் நன்றி சொல்லவும் தமிழுக்குள் வார்த்தையில்லை!

(ஓஹோ அதனால்தான் Thank you, Thank you-ன்னு இங்கிலிஷ்ல சொல்றிங்களோ ? 
கவிஞரின்  கற்பனை ஓஹோ!)

[குழுவினர் (குழந்தைகள்) ] :
நல்லார்க்கு ரஜினியாம் எங்களுக்கு நல்ல கதை சொல்லு மாமா
அந்தப் பாட்டி கதை வேணாம் நீயாச்சும் புதுக்கதை சொல்லு மாமா

[ரஜினி (எஸ். பீ. பி.) ] :
இந்த வாழ்க்கை நாடகத்தை எழுதியவன் உயரத்தில் இருக்கின்றான்
நான் என்ன பாத்திரமோ கேட்கிறேன் மனதிற்குள் சிரிக்கின்றான்
ஒ... ஒ.. ஒ... ஒ...

[ரவிச்சந்திரன் (எஸ்.பீ. பி.) ] :
எங்கோ தூர  திசையில் சோகக்குரலில் குழந்தை அழுகை கேட்கவில்லையோ
பிள்ளை தாயின் முகத்தை தந்தை முகத்தை உலக சுகத்தைப் பார்க்கவில்லையோ
க்வாஆஆ (குழந்தை அழுகுரல்)
[ஒரு சிறுமி] :
அது யார் அழுகையோ? அது ஏன் அழுகுதோ?

[குழுவினர் (குழந்தைகள்) ] :
அது யார் அழுகையோ? அது ஏன் அழுகுதோ?
[ரவிச்சந்திரன் (எஸ். பீ. பி.) ] :
நம் நாடு எதிர்கொள்ளும் ஆபத்தின் அறிகுறியோ?
அந்தப் பிள்ளை அழுவது புரட்சியின் புது மொழியோ?
க்வாஆஆ (குழந்தை அழுகுரல்)

படத்தின் பெயர் : நாட்டுக்கொரு நல்லவன்
தயாரிப்பு, கதை, இயக்கம் : வி.ரவிச்சந்திரன்
இசை : அம்சலேகா
பாடல்கள்:  கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து.
மேலே உள்ள இந்தப் பாடலை எழுதியவர் முத்துலிங்கமா?
வைரமுத்துவா? என்பது தெரியவில்லை.
இந்தப் பாடல் உங்களுக்குப் பிடிக்குமா? 

இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி!

!

10 comments:

Anonymous said...

good

கலையன்பன் said...

@தமிழ் வாழ்க.....

உங்கள் பாராட்டிற்கு நன்றி 'தமிழ் வாழ்க' அவர்களே!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்று தொடருங்கள்

ரஹீம் கஸ்ஸாலி said...

அருமையான ஒரு பாடலை ரஜினி பிறந்தநாளின் பொது போட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

கலையன்பன் said...

@பிரஷா...

தங்கள் கருத்திற்கு நன்றி!

கலையன்பன் said...

@ரஹீம் கஸாலி...

அருமையான பாடல்தான்.
நீங்கள் கேட்டதுண்டா?
படம் பார்த்ததுண்டா?

கருத்திற்கு நன்றி!

r.v.saravanan said...

ரஜினி பிறந்த நாள் பாடல் அருமை கலையன்பன்

கலையன்பன் said...

@r.v.saravanan ...

தங்கள் கருத்திற்கு நன்றி!

ம.தி.சுதா said...

அருமையான வரிகள்.. பட்டையை கிளப்புங்க...

கலையன்பன் said...

@ம.தி.சுதா ...
நன்றி சகோ!

//அருமையான வரிகள்..//
பாராட்டு கவிஞருக்கே!

//பட்டையை கிளப்புங்க...//
இந்த பாராட்டு எனக்கே!
தொடர்ந்து வாருங்கள்!
தங்கள் கருத்துக்கள் தாருங்கள்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...