Saturday, March 23, 2013

ஓடக்கர மண்ணெடுத்து

"ஓடக்கர மண்ணெடுத்து"

" தஞ்சாவூரு மண்ணு எடுத்து" என்று  பொற்காலம்
படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
"ஓடக்கர மண்ணெடுத்து" என்று ஆரம்பிக்கும் பாடலைக்
கேட்டிருக்கிறீர்களா?
 


 "ஓடக்கர மண்ணெடுத்து" என்கிற இன்றைய பாடல்
மிக சோகமான பாடல் ஆகும். எஸ்.ஜானகியின்
உருக்கமான குரலில் பாடல் நம்மை ஆழ்மனதினுள்
சென்று உருக்கும் வல்லமையுள்ளது. 








பாடலைப் பார்ப்போம்.

பாடல் 18:

 பல்லவி:

ஓடக்கர மண்ணெடுத்து
ஒம் உருவம் செஞ்சி வச்சேன்
ஓடக்கர மண்ணெடுத்து
ஒம் உருவம் செஞ்சி வச்சேன்
ஓடையெல்லாம் தண்ணிவந்து
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன? ராசாவே
ஒன்ன மட்டும் பிரிச்சதென்ன?
                                                                ( ஓடக்கர மண்ணெடுத்து...)

சரணம் 1:

மணப்பொருத்தம் பார்த்து வச்சேன்
மாலை ரெண்டும் வாங்கி வச்சேன்
ஊரார் கண்ணும் உறுத்தியதே - என் ராசாவே
ஊழ்வினையும் துரத்தியதே
                     (ஓடக்கர மண்ணெடுத்து......)



 சரணம் 2:

படுத்தா பல நெனவு
பாயெல்லாம் கண்ணீரு
ஹ்ஹ் ஹ்ஹ் ஹ்ஹ் (விம்மல்)
படுத்தா பல நெனவு
பாயெல்லாம் கண்ணீரு - என் ராசாவே
எடுத்துச் சொல்லா யாரிருக்காங்க?
என் ராசாவே.... எடுத்துச் சொல்லா யாரிருக்காங்க?
                         (ஓடக்கர மண்ணெடுத்து......)


இந்தப் பாடல், அனேகமாக இராம.நாராயணன் படத்தில்
அல்லது ஏ.எம்.காஜா படத்தில் இடம்பெற்றிருக்கலாம்
என்று நினைக்கிறேன்.

இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?
எந்தப் படத்தில்?
யார் இசையில்?
யாரின் வரிகளில்? -என்ற விவரங்கள் தெரிந்தால்
பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தெரியவில்லை நண்பரே...

வரிகள் அருமை... நன்றி...

'பரிவை' சே.குமார் said...

பாட்டு நல்லாயிருக்கு...
நானும் உங்கள் பகிர்வின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்...

கலையன்பன் said...

திண்டுக்கல் தனபாலன் said...

தெரியவில்லை நண்பரே...

வரிகள் அருமை... நன்றி...
-----------------------------------------------------
நன்றி நண்பரே!

கலையன்பன் said...

சே. குமார் said...

பாட்டு நல்லாயிருக்கு...
நானும் உங்கள் பகிர்வின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்...
--------------------------------------------------------------------------------------------
நன்றி நண்பரே!

கலையன்பன் said...

;"ஓடக்கர மண்ணெடுத்து"

sury siva said...

இந்த பாடலை எங்கு கேட்டீர்கள் என்று ஒரு சுட்டி தாருங்களேன்..
ஓடக்கர மண் எடுத்து என்று ஒரு பாடல் புஷ்பவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி பாடிய பாடல் இங்கே இருக்கிறது
இருப்பினும் அந்த பாடல் வரிகள் வேறு.

https://www.youtube.com/watch?v=ECKgUcauFSA

ஜானகி பாடியதாக இருந்தால் 60 முதல் 80 வரை வந்ததாக இருக்கலாம்.
ஜானகி பாடிய தமிழ் பாடல்களிலும் இது இல்லை.

அப்ப யாரு ?

சுப்பு தாத்தா.

www.subbuthatha.blogspot.in

கலையன்பன் said...

அப்ப யாரு?
தெரியலையே!
வந்(து கருத்து தந்)ததற்கு நன்றி சுப்பு தாத்தா!

r.v.saravanan said...

ஆரம்ப வரிகள் மட்டும் கேட்டது போன்ற உணர்வை தருகிறது மற்ற படி எனக்கு தெரியவில்லை சார் தெரிந்தால் சொல்லுங்கள்

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பாடலைப் பற்றிய தேடலைக் கண்டுவந்தேன்!
கூடலைப் போன்றே குளிர்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கலையன்பன் said...

@ r.v.saravanan
- - - - - - - - - - - - - - -
ஆரம்ப வரிகளுடன்
மற்ற வரிகளையும்
தெரிந்து கொண்ட
தகவல் தந்தமைக்கு
நன்றி!

பாண்டியனின் துணுக்குகள் said...

புதிய தோரணங்கள்

கலையன்பன் said...

//பாண்டியனின் துணுக்குகள் said...
புதிய தோரணங்கள்//

தகவலுக்கு நன்றி சார்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...