Saturday, July 20, 2013

பாட்டை மாத்துங்க கவிஞரையா! (1)

பாட்டை மாத்துங்க கவிஞரையா! (1)

'பாட்டை மாத்துங்க கவிஞரையா' என்கிற இந்தப் பதிவு சும்மா கிண்டல்,
கலாய்ப்புக்காக மட்டுமே; நோ சீரியஸ்!
இந்தப் பாட்டைக் கேட்டுருப்பீங்க:

"ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே வா வா வா வா!"

-அது எப்படி? ஓர் ஆண்டு முடிந்தால், வயதிலொன்று கூடுமா? அல்லது குறைந்து போகுமா?
ஒருவருக்கு 25 வயது என்று வைத்துக் கொண்டால், ஒர் ஆண்டு முடிந்ததும் 'வயதொன்று போய்'
அவரது வயது 24 ஆகிவிடுமா? பிறந்து ஓர் ஆண்டு நிறைவடைகின்ற குழந்தைக்கு, 365 நாட்கள்
முடிந்ததும் வயது போய் '0' வயது ஆகிவிடுமா?

 
அதனால் பாட்டை இப்படி மாத்துங்க கவிஞரே!

"ஆண்டொன்று போனால்
வயதொன்று கூடும்
அதற்கு முன்னாலே வா வா வா வா!"

அல்லது

"ஆண்டொன்று போனால்
வயதொன்று வருமே
அதற்கு முன்னாலே வா வா வா வா!"
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போமே!

-கலையன்பன்.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வயதொன்று போகும்...
அதற்கு முன்னாலே வா வா வா வா...

இந்த இரு வரியையும் யோசிங்க... (முன்னாலே பதில் பின்னாலே என்று அல்ல... ஹிஹி)

"அதற்கு ......... வா வா வா வா..." விசயமே இதில் தான்...!

ஒரு பதிலும் உங்கள் பதிவிலும் உள்ளது...!

நோ சீரியஸ்! ஹா..... ஹா.....

'பரிவை' சே.குமார் said...

அது சரி...

r.v.saravanan said...

இது எப்படி என்றால் இப்ப பதினாறு வயசு என்றால் அடுத்த வருடம் அந்த வயது முடிந்து பதினேழு வயது வந்து விடும் பின் அந்த வயது வாழ்க்கையில் வராது.ஆகையால் தான் வயதொன்று போகும் என்று எழுதியிருக்கிறார்

Unknown said...

நம் வாழ்க்கையில் மிச்சம் இருக்கின்ற ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டு போய் விடும் என்று எடுத்துக் கொள்ளலாமே

கலையன்பன் said...

=> திண்டுக்கல் தனபாலன்,

புதிய கோணத்தில் சிந்தித்து,
சொன்ன இந்தக் கருத்து...
நன்று... நன்றி!

கலையன்பன் said...

// சே. குமார் said...

அது சரி...//

ஆமாம் சரிதான்...
உங்கள் கருத்தும் சரிதான்...
நன்றி!

கலையன்பன் said...

=> r.v.saravanan,


உங்கள் கருத்துப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.
நன்றி!

கலையன்பன் said...

=> Athi Sivan ,

அப்படியா!?
உங்கள் கருத்துக்கு
நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...