Sunday, July 28, 2013

பாட்டை மாத்துங்க கவிஞரையா! (2)

 
இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!


"அதான்டா இதான்டா
அருணாசலம் நாந்தான்டா"
-என்கிற பாடலைக் கேட்டிருப்பீர்கள்.(இந்தப் பாட்டு எந்தப் படத்தில்?)


சரணத்தில் இரு வரிகள் வரும்.
"மீன் செத்தாக் கருவாடு;
நீ செத்தா வெறும்கூடு;
கண்ணதாசன் சொன்னதப்பா!"


-இதில் வந்துள்ள இரண்டாவது வரியைப் பற்றி நான் கருத்து எதுவும் கூற(  விரும்ப)வில்லை.


ஆனால், "மீன் செத்தாக் கருவாடு" என்கிற வரியை மட்டும் பார்ப்போம்.
எங்கள் ஊர் பக்கம்லாம்  'மீன் செத்தா அப்பவும் அது (பேரு) மீன்' தான். உங்கள் ஊர்லலாம் அப்படித்தானே? இல்லை, வேறு மாதிரியா?


அந்த மீன் அல்லது எந்த மீனும் செத்ததும் அப்பவும் அது மீனுதான். பிறகு அந்த மீனை, வயிறு நடுவில்
கீறி, வயிற்றினுள் இருக்கும் குடல் மற்றும் அழுக்குகளை நீக்கிவிட்டு, நன்றாக உப்பு போட்டு, ஊறவைத்து,
பிறகு கொண்டுவந்து வெயிலில் போட்டு... அது காய, காய...
அப்புறம்தான் அது கருவாடு! சரிங்களா?


அதனால், கீழே வருகிற மாதிரி பாட்டை மாத்துங்க கவிஞரையா!


"மீன் காஞ்சா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு!"

-கலையன்பன்.


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// மீன் காஞ்சா கருவாடு/// மீன் எப்போது எப்படி காயும்...?

நோ சீரியஸ்...! ஹிஹி...

Anonymous said...

"மீன் காஞ்சா கருவாடு
நீ சாஞ்சா வெறும்கூடு!"

இது எப்பூடி?

கலையன்பன் said...

=>> திண்டுக்கல் தனபாலன்,

நீங்க கேள்வி கேட்டாலும் நோ சீரியஸ்னு சொல்லிட்டீங்க.
அதனால் பதில் சொல்லலை!
-கலையன்பன்.

கலையன்பன் said...

=>> Anonymous,

நல்லாயிருக்குங்க!
உங்க பேருங்க?
-கலையன்பன்.

'பரிவை' சே.குமார் said...

அது சரி... மீனை சுத்தம் செய்து நாம பக்குவம் செய்து காய வச்சாத்தான் கருவாடு... அதுவா காஞ்சா அது கருவாடு இல்லீங்க....

Seeni said...

athu sari..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...