Saturday, September 14, 2013

ஓரக்கண்ணால... (பாட்டை மாத்துங்க கவிஞரையா - 4)



இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!

"ஓரக் கண்ணாலே என்ன ஓரங்கட்டுறா" என்ற கானாவைப்
பாடிய 'கானா பாலா' ஒரு வழக்கறிஞரும்கூட.
கலைஞர் டீ.வி.யில் ஒளிபரப்பான 'கானா குயில் பாட்டு'
என்ற தொடர் போட்டியில் தேவா அவர்களிடமிருந்து
பரிசு வென்றவர். இவர் பாடல்கள் இயற்றிப் பாடுவதில் வல்லவர்.
சமீபத்தில் வெளியான 'உதயம் என்.ஹெச்.4' என்ற படத்தில்
மேலே குறிப்பிட்டிருக்கும் பாடலைப் பாடியிருந்தார் பாலா.
இப்பாடலின் இரண்டாவது சரணத்தின் கடைசி வரியில்,
"மச்சான் சேர்த்து வப்பான் - நீ
பீரக் குடி நண்பா"
என்று பாடியிருப்பார் பாலா.

சிகரெட் போன்ற போதைப் பொருட்களின் விளம்பரங்களை
வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பக் கூடாது;
இதழ்களில் பிரசுரம் செய்தல் கூடாது என்று தடை விதித்துள்ளது
மத்திய ஒலிபரப்புத் துறை. இதையும் மீறி போதை பானங்களின்
பெயரிலேயே சோடா தண்ணீரையும் தயாரிக்கும் நிறுவனங்கள்
சோடா தண்ணீர் விளம்பரங்களை லட்சக் கணக்கில் செலவு செய்து
ஒளிபரப்புகின்றன. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை.

முன்பெல்லாம் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில்
சில அருவெறுக்கத்தக்க, கொச்சையான வார்த்தைகள்
இடம்பெற்றால், தணிக்கைத் துறை அந்த வார்த்தை
அல்லது வார்த்தைகளை கட் செய்துவிடும். வானொலி,
தொலைக்காட்சியில் அப்பாடல் ஒலி(ளி)பரப்பாகும்போதூ
வார்த்தையில்லாமல் மௌனமாக அந்த சில நொடிகள்
கடந்துபோகும். இக்காலத்திலோ, எத்தடையுமில்லை
என்றாகிவிட்டது. மானாடும், மயிலாடும் நிகழ்ச்சிகளில்
ஆடிப்பாடுவதை சிறார்கள் ரசித்துக் கேட்பதுவும்...
ஜூனியரா, சூப்பரா, சிங்கரா நிகழ்ச்சிகளில் சிறார்கள்
பாடுவதும்... அவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துவதும்
கொடுமை!

"ஓரக்கண்ணால..." பாடலில் இடம்பெறும்
அந்தக் கடைசி வரியின் வார்த்தையான
'பீர' என்பதை தணிக்கைத் துறை தடை செய்திருக்க
வேண்டும். அல்லது படத்தில் போனால் போகிறது;
வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பும்போதாவது
அந்த சப்தத்தை (வார்த்தையை) வெட்டியிருக்கலாம்.


முன்பு 'பாவ மன்னிப்பு' படத்தில் "வந்த நாள் முதல்
இந்த நாள் வரை" என்ற பாடலின் பல்லவிலேயே
"மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்"
என்று படத்திலும் "மனிதன் மாறிவிட்டான் மரத்தில்
ஏறிவிட்டான்" என்று இசைத்தட்டுகளிலும் பாடல் வரி
மாறிவரும். அதைப் போலவே இந்தப் பாடலிலும்
செய்திருக்கலாம்.


அதனால் இந்தப் பாடலின் வரியில் வார்த்தையை இப்படி
ஏதாவது ஒரு வகையில் மாற்றுங்கள் கவிஞரையா!


ஒன்று:
"மச்சான் சேர்த்து வப்பான் - நீ
பாலக் குடி நண்பா"


இரண்டு:
"மச்சான் சேர்த்து வப்பான் - நீ
மோரக் குடி நண்பா"


மூன்று:
"மச்சான் சேர்த்து வப்பான் - தே
நீரக் குடி நண்பா" (தேநீர்)


நான்கு:
"மச்சான் சேர்த்து வப்பான் - இள
நீரக் குடி நண்பா" (இளநீர் கலபடமில்லாத
சுவை மிகுந்த சத்து பானம்.)
மேடைப்பாடக அன்பர்களும் இப்படி மாற்றிப் பாடக் கேட்டுக் கொள்கிறேன்.

-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*
                 

9 comments:

Unknown said...

நீங்களே சொல்லிட்டீங்க நோ சீரியஸ் என்று ...மாற்றவா போகிறார்கள் ?அதெல்லாம் அந்தக் காலமாகி போச்சு !
த.ம.1

கலையன்பன் said...


@Bagawanjee KA...

=>வருகைக்கும் கருத்திற்கும் த.ம. வாக்குக்கும்
நன்றி சார்!

கலையன்பன் said...

@Bagawanjee KA...

=>இணைந்து கொண்டதற்கும் நன்றி சார்!

'பரிவை' சே.குமார் said...

இப்பெல்லாம் மாற்றுவது இல்லை...

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஒரு பாடலில் கிங்பிஷர் பீர்ன்னு ஆடியோவில் வரும்... அதையே படத்தில் கூலிங்க் பீர் என்கிறார்கள்... அப்புறம் எப்படி பீர் குடிக்க என்பதை மாற்றுவார்கள்...

கலையன்பன் said...

@சே. குமார் ...

=>ஆமாம், சமச்சது பற்றி பாட்டு எழுதுவதுமாதிரி,
ரொம்ப சாதாரணமா சமஞ்சது எப்படின்னு
எழுதறாங்களே!!! என்ன செய்ய?

வருகை தந்து, கருத்தைத் தந்தமைக்கு நன்றி
சார்!

Ramarao said...

முன்பெல்லாம் இசைத் தட்டில் பாடல் முதலில் வெளிவந்த பின், திரைப்படம் தணிக்கைக்கு செல்கையில், censor board பாட்டுக்களை கூட censor செய்தார்கள். உதாரணமாக,

1. சுமைதாங்கி படத்தில் வரும் பாட்டு. இசைத் தட்டில் "எந்தன் பருவத்தின் கேள்விக்கு" என்று வரும். ஆனால் தணிக்கைக்குப்பின் திரைப்படத்தில் "எந்தன் பார்வையின் கேள்விக்கு" என்று மாற்றப்பட்டது.

2. பாக்யலக்ஷ்மி படத்தில் வரும் பாட்டு.

இசைத் தட்டில் " கல்லூரி ராணிகாள் உல்லாச தேனிகாள் பொன்னான இந்த மாலை நேரமே. சல்லாபம் செய்வதா சொல்லாமல் போவதா கொல்லாமல் கொல்வதே நல்லதா"

தணிக்கைக்குப்பின், திரைப்படத்தில், "சிங்கார சோலையே உல்லாச வேளையே பொன்னான இந்த மாலை நேரமே. எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம் நில்லாமல் போவதே நல்லதா"

இப்போதெல்லாம் censor board பாடல்களின் வரிகளை சீரியசாக கவனிப்பதில்லை என்று நினைக்கிறேன்.

புகை பிடித்தல் மது அருந்துதல் தீங்கானது என்று போடுவதற்கு பதிலாக, அந்த சீன்களையே படத்திலிருந்து வெட்டிவிட்டால் நன்று. பாடல்களிலும் அவற்றை mute செய்ய வேண்டும் அல்லது வரிகளை மாற்றச் சொல்ல வேண்டும்.




கலையன்பன் said...

//Ramarao said...
முன்பெல்லாம் இசைத் தட்டில் பாடல் முதலில் வெளிவந்த பின், திரைப்படம் தணிக்கைக்கு செல்கையில், censor board பாட்டுக்களை கூட censor செய்தார்கள். உதாரணமாக, //


@ Ramarao

தங்கள் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி சார்.
தங்களின் கருத்துரையில் புதிய தகவல்களையும்
தங்களின் எண்ணங்களையும் அறியும்போது
மிகுந்த சந்தோஷம் அடைகின்றேன்.

தாங்கள் தொடர்ந்து வந்து, தங்கள் கருத்துக்களை
அளித்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

aavee said...

மக்கள் நலனில் உங்க அக்கறையை ரசித்தேன்..

கலையன்பன் said...

@ கோவை ஆவி ...

வருகை தந்து, கருத்திட்டமைக்கு நன்றிங்க...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...