Tuesday, October 1, 2013

சில நேரம் சில பொழுது! (பாடல் 21)

சில நேரம் சில பொழுது!

சேரனின் 'ஆட்டோகிராஃப்' படத்தில் எஸ்.சித்ரா பாடிய
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!" என்கிற பாடல்
செம ஹிட். அந்தப் பாடல் சோர்வுற்றிருக்கும் எவருக்கும்
தன்னம்பிக்கையை அளித்துவிடும் ஆற்றல் கொண்டது.

அதே காலக்கட்டத்தில் வெளியான 'கிச்சா வயசு 16'
என்ற படத்தில் வரும் "சில நேரம் சில பொழுது" என்கிற
பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இந்தப் பாடல்கூட
உற்சாகத்தைத் தரும் தத்துவப் பாடலே!

படம்: கிச்சா வயசு 16.
நடிகர்கள்: ஜெய் ஆகாஷ், சிம்ரன், சுஜிபாலா, மணிகண்டன்.
இயக்கம்: ஏ.என்.ராஜகோபால்.
படம் வெளிவந்த நாள்: 25 மார்ச் 2005.
பாடகர்: உன்னி மேனன்


பாடல் 21:
பல்லவி:

சில நேரம் சில பொழுது சோதனை வரும்பொழுது
நம்பிக்கையாய் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது
லட்சியக் கதவுகளைத் திறந்து வைப்போம்
இதயத்தின் சோகங்களை இறக்கி வைப்போம்
சூரியன் என்பதுகூட சிறு துளிதான்
சாதிக்க முதல் தகுதி ஒரு தோல்விதான்
[சில நேரம்...]

சரணம் 1:
வானம் தரையில் மோதாது
பூமி நகர்ந்து போகாது
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை
தொலைந்து ஒன்றும் போகாது
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும்தான் ஏற்றுக் கொண்டால்
வாழ்க்கை என்றும் தோற்காது
நெஞ்சே உன் நெஞ்சே தடையாவும் துரும்பு
தீயாய் நீயானால் மெழுகாகும் விருந்து
தோல்வி அவை எல்லாம் சில காயம் தழும்பு
ஏறு முன்னேறு  ஒளியோடு திரும்பு
பறவை அதற்கு இறகு சுமையா
தோல்வி ஒரு தடையா
[சில நேரம்...]

சரணம் 2:
உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது
பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது
இன்று வந்த ராஜாக்கள் நேற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும்போது தன்னை நம்பி வாழ்ந்தார்கள்
கோடு அது நீளும் புது கோலம் பிறக்கும்
மேடு அதில் ஏறும் நீர் வேகம் எடுக்கும்
சோகம் அதை வென்றால் ஒரு சக்தி பிறக்கும்
பாதை சில போனால் பல பாதை திறக்கும்
நேற்றை மறப்போம் நாளை ஜெயிப்போம்
இன்று ஜெயித்திருப்போம்
[சில நேரம்...]

இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் யார் என்பது
தெரிந்தால் சொல்லுங்கள்.

-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*




8 comments:

Ramarao said...

பாடலாசிரியர்: பா. விஜய்

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்த பாடல்... எனது பல பதிவுகளில் இந்த பாடல் வரிகள் உண்டு...

கலையன்பன் said...

@ Ramarao ...

வருகை தந்து பாடலாசிரியர் பெயரைத் தெரிவித்தமைக்கு நன்றி சார்!

கலையன்பன் said...

@ திண்டுக்கல் தனபாலன் ...

தங்களுக்கும் பிடித்த பாடலா? தங்கள் பதிவுகளிலும் பயன்படுத்தியுள்ளீர்களா?
தகவலுக்கு நன்றி சார்!

சே. குமார் said...

நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

கலையன்பன் said...

@ சே. குமார் ...

வந்து கருத்து தந்ததற்கு நன்றி!

கலையன்பன் said...

@ இராஜராஜேஸ்வரி ...

படித்து கருத்திட்டமைக்கு நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...