Friday, November 1, 2013

பாட்டு ஒற்றுமை - 5

தீப ஒளி வாழ்த்துக்கள்!!! 

பல திரைப்படங்களில் நிறைய   கவிஞர்கள் காதலியை வர்ணித்து பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.  அவர்கள் காதலியின் முகத்தையும் குறிப்பாக அவர்களின் கண்களையும் வர்ணித்து எழுதியிருக்கிறார்கள்.
பின் வரும் சில பாடல்களைப் பாருங்கள்.

1. கண்களும் கவிபாடுதே... (படம்: அடுத்தவீட்டுப் பெண்.)

2. கண்ணாலே பண்பாடும் உன்னாலே  வாழ்விலே   இன்பம் கொண்டாடுவேன்.

3. கலையே உன் விழிகூட கவி பாடுதே! தங்கச்
சிலையே உன் நிழல்கூட ஒளிவீசுதே!


ஆக, காதலியை வர்ணிப்பதென்றால், அவளுடைய கண்களை
மட்டுமல்லாது, அந்தக் கண்கள் 'கவி பாடுது' என்றும்
'பண் பாடுது' என்றும் கவிஞர்கள் பாடலை எழுதிவிடுகிறார்கள்.
இன்னும் சில கவிஞர்கள் எழுதும் பாடலில் அந்தக்
கண்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்பதையும் பாருங்கள்.

1. கண்களின் வார்த்தைகள் புரியாதோ?

2. கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே

3. பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா?

4. விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே 

ஒவ்வொரு கவிஞரும் தத்தமது கற்பனையைக் கொண்டு
ராகத்திற்கு ஏற்றபடி வேறு வேறு வார்த்தைகளில்
தந்துள்ளது ரசிக்கும்படி இருக்கின்றதல்லவா?

கவிஞர்களின் பெயர்களையும் தெரிந்தால்
கூறுங்களேன்.

-கலையன்பன்.
                                                         

                                                                
                                                                         

***உங்கள் கருத்துரைகளை வழங்குங்கள் நண்பர்களே!*** 




6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

கலையன்பன் said...

... திண்டுக்கல் தனபாலன் ...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீப ஒளி வாழ்த்துக்கள் சார்!!!

நம்பள்கி said...

ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

கலையன்பன் said...

நம்பள்கி ....!!!!

வருக நண்பரே! மொய் வைத்ததற்கு நன்றி!
என்ன உங்கள் புரஃபைல் திறக்கவில்லையே?

Ramarao said...

எல்லா பாடல்களையும் எழுதிய கவிஞர்கள் இருவரே.

தஞ்சை ராமையாதாஸ் எழுதிய பாடல்கள்:

1. கண்களும் கவிபாடுதே... (படம்: அடுத்தவீட்டுப் பெண்.)

2. கண்ணாலே பண்பாடும் உன்னாலே வாழ்விலே இன்பம் கொண்டாடுவேன். (படம்: திரும்பிப்பார்)

3. கலையே உன் விழிகூட கவி பாடுதே! தங்கச்
சிலையே உன் நிழல்கூட ஒளிவீசுதே! (படம்: குணசுந்தரி)

4. கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே (படம்: அடுத்த வீட்டு பெண்)

கவிஞர் கண்ணதாசன் எழுதியவை:

1. கண்களின் வார்த்தைகள் புரியாதோ?
(படம்: களத்தூர் கண்ணம்மா)
2. பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா?
(படம்: யார் நீ)
3 விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
(படம்: உரிமைக்குரல்)

கலையன்பன் said...

...Ramarao ...

சார்! வந்து விளக்கமான பதிலை, விரிவாகத் தந்தமைக்கு மிக்க நன்றி சார்!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...