இன்றைய பாடல் 'ஒரு ஊரில் ஊமை ராஜா' என்ற பாடல்!
சிவகுமார், அம்பிகா நடிப்பில் வெளியான 'தீர்ப்புகள்திருத்தப்படலாம்' என்ற படத்தில் இடம் பெற்றது இப்பாடல்.
பாடல் 14:
ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம்பட்டால்
எதைச் சொல்வதோ?
சரணம் 1:
நெஞ்செல்லாம் ஒரே காயம்
நீ தந்தாய் என்ன நியாயம்?
மருந்து நோயாகலாமா?
மனதை நீ வாட்டலாமா?
நெஞ்செல்லாம் ஒரே காயம்
நீ தந்தாய் என்ன நியாயம்?
மருந்து நோயாகலாமா?
மனதை நீ வாட்டலாமா?
விழிகள் காண்பதென்ன மெய்தானா?
விளக்கில் என்ன இருளா?
இது கிழக்கில் அஸ்தமனமா?
கண்கள் சொல்லும் சாட்சி ஒன்று
நெஞ்சம் சொல்லும் சாட்சி ஒன்று
எந்தப்பக்கம் உண்மை என்று தீர்ப்பு சொல்லம்மா...
ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம்பட்டால்
எதைச் சொல்வதோ ?
சரணம்: 2
நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்
நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்
நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்
வளையல் நான் வாங்கித் தந்தேன்
விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்
நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்
நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்
வளையல் நான் வாங்கித் தந்தேன்
விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்
மலரில் மாலைகட்டி நான் தந்தேன்
சிலுவை எதற்கு சுமந்தாய்?
என் மனதில் ஆணி அறைந்தாய்!
விக்கலுக்கு தண்ணி உண்டு
சிக்கலுக்கு என்ன உண்டு?சக்கரங்கள் ரெண்டும் ரெண்டு பக்கம் செல்வதோ?
ஒரு ஊரில் ஊமை ராஜா
அவன் ராணி முள்ளின் ரோஜா
தொடும்போது காயம்பட்டால்
எதைச் சொல்வதோ ?
-இதுதான் பாடல்! .
படம்: தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்
இயக்கம்: எம்.பாஸ்கர்
நடிகர்கள்; சிவகுமார், அம்பிகா
பாடகர் : பீ.ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்கள் : சங்கர் - கணேஷ்.
'தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்' படத்தில் இரு பாடல்கள் மட்டுமே
உண்டு. இயக்குனர் எம்.பாஸ்கரின் அடுத்த படமான
'தண்டிக்கப்பட்ட நியாயங்கள்' படத்தில் ஒரு பாடல் மட்டுமே!
மேற்படி பாடலின் பாடலாசிரியர் பற்றிய விவரம் தெரியவில்லை.
இந்த பாடல் பற்றியும் இந்த இடுகை பற்றியும் உங்கள் கருத்துக்களை
அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
நன்றி!
!
10 comments:
//கிழக்கில் அஸ்தமனமா?
ரசிக்கும்படியான வரி நண்பரே ..
நேயர் விருப்பம் ஒன்று ...
எந்த படம் என்று சரியாக ஞாபகம் இல்லை (டார்லிங் டார்லிங் டார்லிங் என்று நினைக்கிறேன்) ... பாக்கியராஜ், பூர்ணிமா நடித்தது நடித்தது பாடல் "ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் " இந்த பாடல் வரிகளை முடிந்தால் போட முடியுமா நண்பா ...
நான் தேடி பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை
பாடல் அறிமுகம் அருமை. பாடலுக்கான லிங்க் கொடுத்தால் இன்னும் நல்லாயிருக்குமே?
@ "ராஜா" said...
தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!
@"ராஜா" said...
நேயர் விருப்பம் ஒன்று ...
தாங்கள் சொல்வதுபோல் படம் சரிதான்.
எனக்கும் பாடல் தெரியாது.
கிடைத்தால் பகிர்கிறேன். நன்றி!
@சே.குமார்...
கருத்திற்கு நன்றி!
தேடி(ப் பார்த்து) விட்டேன்;
கிடைக்கவில்லை.
கிடைத்தால் இணைக்கிறேன்.
இந்த பாடல்களை எங்கிருந்து பி(ப)டிக்கிறீர்கள். பாடலை நான் கேட்டதில்லை. ஆனால் வரிகள் அருமை. அப்படியே ஒவ்வொரு பாடலுக்கும் வீடியோ கிடைத்தால் இணைக்கவும். இன்னும் நன்றாக இருக்கும்
கலையன்பன் said...
@சே.குமார்...
கருத்திற்கு நன்றி!
தேடி(ப் பார்த்து) விட்டேன்;
கிடைக்கவில்லை.
கிடைத்தால் இணைக்கிறேன்.
நானும் தேடினேன். கிடைத்துவிட்டது. கீழே அந்த பாடலுக்கான லிங்க்
http://www.youtube.com/watch?v=pNZxBGE7QvA
@ ரஹீம் கஸாலி ...
கருத்திற்கு நன்றி !!!
@ ரஹீம் கஸாலி ...
http://www.youtube.com/watch?v=pNZxBGE7QvA
இணைப்பைத் தந்தத்ற்கு மிக்க நன்றி !!!
Post a Comment