Thursday, January 5, 2012

கையில வாங்கினேன் பையில போடல...

கையில வாங்கினேன் பையில போடல...



எல்லோரும் நல்லாயிருக்கீங்களா?

அம்மா பால் விலையை ஏத்திட்டாங்க.
அம்மா பஸ் கட்டணத்தை ஏத்திட்டாங்க.
அம்மா மின் கட்டணத்தை ஏத்தப் போறாங்க.
நம்ம எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்!(?)

உழைக்கும் வர்க்கத்தின் அன்றாட மனக் குமுறலை
இசையோடு எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பாடல் 17:

பல்லவி
கையில வாங்கினேன் பையில போடல - காசு
போன இடம் தெரியல
என் காதலி பாப்பா காரணம் கேட்பா
ஏது சொல்றது புரியல...
(கையில...)

சரணம் 1:
மாசம் முப்பது நாளும் உழைச்சி
வறுமை புடிச்சி உருவம் இளைச்சி
காச வாங்கினா கடங்காரனெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் - வந்து
எனக்கு உனக்குன்னு பிக்கிறான்
(கையில ...)

சரணம் 2:
கொத்து கொத்தா வேர்வை விட்டா....
பட்டினியாய் பாடுபட்டா....
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பெட்டியிலே - அது
குட்டியும போடுது வட்டியிலே
(கையில...) 

சரணம் 3:
விதவிதமா துணிகள் இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதை எதையோ வாங்கணுமின்னு - அண்ணே
எதை எதையோ வாங்கணுமின்னு
எண்ணம் இருக்கு வழியில்ல்லே - இதை
எண்ணாம இருக்கவும் முடியல்லே
(கையில...)

சரணம் 4:
கண்ணுக்கு அழகா பொண்ணப் படச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படச்சான்
ஒன்னுக்கு பாத்தா செல்வத்தப் படச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படச்சான்
என்னைப் போல பலரையும் படச்சி - அண்ணே
என்னைப் போல பலரையும் படச்சி
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படச்சான்?
(கையில...)



உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
உங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நன்றி!
.

17 comments:

E.K.SANTHANAM said...

உருக்கமான பாடல். பகிர்வுக்கு நன்றி.

கலையன்பன் said...

கருத்திற்கு நன்றி, SANTHANAM.

"ராஜா" said...

வாங்க பாஸ் ரொம்ப நாளுக்கு பிறகு வந்திருக்கீங்க போல ...

பட்டுக்கோட்டையார் இந்த பாட்டுல பட்டைய கெளப்பியிருக்கிறார் ...

கலையன்பன் said...

ஆஹா... கருத்திற்கு நன்றி, ராஜா!

இனி அடிக்கடி வருவேன். தாங்களும் வாருங்கள்!

கோமதி அரசு said...

எனக்கு இந்த பாட்டு மிகவும் பிடிக்கும்.
தங்கவேலு நன்கு நடித்து இருப்பார்.

வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது//
அப்போதும் மயக்கம் வருது.
இப்போதும் மயக்கம் வருது.

காலத்துக்கு ஏற்ற பட்டுக்கோட்டைப் பாட்டு.
பகிர்வுக்கு நன்றி.

கலையன்பன் said...

தங்களுக்குப் பிடித்த பாடல் பற்றிய கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி.

கலையன்பன் said...

தங்களுக்குப் பிடித்த பாடல் பற்றிய கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி.

ராஜி said...

நல்லதொரு பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி

கலையன்பன் said...

@ ராஜி
தங்கள் கருத்தினைப் பதிவு செய்ததற்கு நன்றி.

Unknown said...

நல்ல பாடல். நடுத்தரமக்களின் உணர்வோட்டத்தை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது இந்த பாடல். இன்றைக்கும் பொருந்தக்கூடிய பாடல்.

கலையன்பன் said...

// பாரத்... பாரதி... said...

நல்ல பாடல். நடுத்தரமக்களின் உணர்வோட்டத்தை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது இந்த பாடல். இன்றைக்கும் பொருந்தக்கூடிய பாடல்.
April 2, 2012 4:09 PM //

தங்கள் கருத்தினைப் பதிவு செய்ததற்கு நன்றி.

Unknown said...

பாடல் இடம் பெற்ற படத்தின் பெயரையும் குறிப்பிட்டிருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும். எப்படியோ, நல்ல வரிகளைப் படித்த நிம்மதி கிடைக்கிறது. நன்றி.

கலையன்பன் said...

வருகை + கருத்திற்கு நன்றி Dinamani Nagai...!

ம்... உங்கள் கருத்து சரியே! படத்தின் பெயர் தெரியவில்லை. தெரிந்து பின் இணைக்கின்றேன், நண்பரே!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

கலையன்பன் தந்த கவிபடித்தேன்! மின்னும்
வலையன்பன் என்பேன் மகிழ்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

கலையன்பன் said...

//கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் //

வருகை தந்து, கவி பாடி வாழ்த்தியமைக்கு நன்றி!!!

பூந்தளிர் said...

ரொம்ப நல்ல பாடலைப் பகிர்ந்திருக்கீங்க நன்றி. நல்லா இருக்கு. என் பக்கமும் வந்து பாருங்க. நானும் உங்க பக்கம் முதல் முறையா வந்தேன்

கலையன்பன் said...

//பூந்தளிர் said...

ரொம்ப நல்ல பாடலைப் பகிர்ந்திருக்கீங்க நன்றி. நல்லா இருக்கு. என் பக்கமும் வந்து பாருங்க. நானும் உங்க பக்கம் முதல் முறையா வந்தேன்//

வருகைக்கு நன்றி. இதில் பழைய பதிவுகளையும் படித்துப் பாருங்கள்.
விரைவில் தங்கள் தளம் வருகிறேன்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...