Tuesday, August 13, 2013

பாட்டு ஒற்றுமை (1)

பாட்டு ஒற்றுமை (1)

ஜீன்ஸ் என்ற படத்தில் வரும் இந்தப் பாட்டு வரிகளைக்
கேட்டிருப்பீர்கள்.


"அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றி போனேன்
அடடா அவனே வள்ளலடி"
(இதன் முந்தின வரி நினைவுக்கு வரவில்லை.)

இந்தப் பாடலுக்கு முன்பே 'புதியவன்' என்கிற படத்தில்
(முரளி F/o அதர்வா நடித்த படம்) திரு. கே.ஜே.ஜேசுதாஸ்
பாடும் பாடலான -


'நானோ பெண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே'
-என்கிற பாடலின் அடுத்த சரணத்தில்,


"இது என்ன கூத்து அதிசயமோ
இளநீர் காய்க்கும் கொடி இதுவோ
பருவம் அடைந்தாய் ஒரு பஞ்சம் இல்லை
அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை
நீயே அழகின் எல்லை"
-என்ற வரியுடன் பாடல் வந்துவிட்டது.


(இவ்விரு பாடல்கள் பற்றிய மற்றுமொரு ஒப்பீடு
அடுத்த பதிவில்...  இங்கே சுட்டுங்கள்!)


இந்த இரு பாடல்களிலும் ஒப்பு நோக்குகையில்,
'அடடா',
'பிரம்மன்',
'கஞ்சன்' - என்கிற 3 வார்த்தைகள் இரு பாடல்களிலுமே
வந்திருப்பதைப் பார்க்கலாம்.


ஆகவே, இரு பாடல்களுமே ஒரே கவிஞர் எழுதியதா அல்லது
இரு வேறு கவிஞர்கள் எழுதியவையா என்று சந்தேகம் வருகிறது.
கவிஞர்களின் பெயர்கள் உங்களில் யாருக்காவது தெரியுமா?

-கலையன்பன்.
 

4 comments:

'பரிவை' சே.குமார் said...

இது இரண்டும் வைரமுத்துத்தான்...
நல்லா கூர்ந்து பார்த்திருக்கீங்க...

கலையன்பன் said...

வைரமுத்துதானா!
நல்லா கூர்ந்து பார்த்ததாய் கூறினீர்கள்; எதையென்று கூறவில்லையே அன்பு நண்பரே!

r.v.saravanan said...

புதியவன் படம் முரளி நடித்தது கவிதாலயா தயாரிப்பு வரலாறு முக்கியம் கலையன்பன் சார் ஹா ....ஹா

கலையன்பன் said...

...r.v.saravanan!!!

ஹி...ஹி...ஹி...!
நன்றி! நன்றி!! நன்றி!!!
பிழையைக் குட்டிக் காட்டியதற்கு,
அல்ல அல்ல,
பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு,
சரவணன் சாருக்கு நன்றிகள்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...