Sunday, September 29, 2013

பெத்து எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5)

பெத்து எடுத்தவதான்... (பாட்டை மாத்துங்க கவிஞரையா 5)
இது ஒரு கலக்கல், காமெடி பதிவு மட்டுமே!
நோ சீரியஸ்!

ரஜினி நடித்த 'வேலைக்காரன்' படத்தில் கவிஞர் மு.மேத்தா
எழுதி மலேஷியா வாசுதேவன் பாடிய இந்தப் பாடலைக்
கேட்டிருப்பீர்கள்.

"பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியக் கட்டிப்புட்டா
பெத்தவ மனசு பித்தாச்சு - இந்த
பிள்ளையின் மனசு கல்லாச்சு"

இந்த மகன் பாடும்போது தனது அம்மா தன்னை தத்து
கொடுத்துப்புட்டாள் என்றும் தன்னை வித்துப்புட்டாள்
என்றும் அடுத்தடுத்து பாடுகின்றான். இதில் தத்து
கொடுத்தாளா அல்லது வித்தாளா என்று குழப்பம்தான் வருகின்றது.

அடுத்து, பிள்ளையை தாய் பெறுகின்றாள். அந்த ஒரு
தியாகத்திற்காகவே, அந்த மகன் அவனது தாய்க்கு
பெரும் கடமைப் பட்டிருக்கின்றான். அதாவது தாய்க்கு
அவன் கடன் பட்டிருக்கின்றான். அதனால், அந்த
தியாகத்தை மனதில் நிலைநிறுத்தி, அதற்கான
பரிகாரமாய் அந்தத் தாய்க்கு, மகன் நன்றிக்கடன்
பட்டிருக்கின்றான். அதாவது கடன் பட்டிருக்கின்றான்
என்றும் வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு அந்த மகன்,
தாய்க்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றால்,
கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், அத்தாய்
மகனை விற்று வட்டியை எடுத்துக் கொள்ளலாம். இது
நியதி.

ஆக, மகன் தான் தாய்க்கு கடன் பட்டிருக்கின்றான்
என்பதும் தாய்க்குத்தான் அந்த வட்டி செலுத்தப்படவேண்டும்
என்பதும் நமக்குத் தெரியவருகின்றது. தாய், வேறு யாருக்கும்
கடன் படவில்லை என்பதும் அவள் வட்டியை யாருக்கும்
செலுத்தத் தேவையில்லை என்பதும் நமக்குப் புரியவருகின்றது.
பாடலில் வரும் 'வட்டியக் கட்டிப்புட்டா' என்ற வார்த்தை
மாறுபட்ட அர்த்தத்தைத் தருகின்றது. வேறு ஒருவருக்கு
வட்டியை செலுத்திவிட்டாள் என்ற பொருள்பட இங்கு
பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பாட்டை பின்வருமாறு மாத்துங்க கவிஞரையா!

"பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப்புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டிஎடுத்துக்கிட்டா"

-கலையன்பன்


*தமிழ்மணத்தில் வாக்களித்து, உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!*

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... அது சரி...!

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

கலையன்பன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

தங்கள் உதவி தேவைப்படுகின்றது. அதனால்
மெயிலில் தொடர்பு கொள்கிறேன் சார்!

Ramarao said...

கலையன்பன் ஸார்,



நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் "மாவீரன்" படத்தில் இடம் பெற்றதல்ல. "வேலைக்காரன்" படத்தில் இடம் பெற்ற பாடல்.



இரண்டாவதாக கவிஞர் கூறியிருப்பது "தாய் வேறு ஒருவரிடம் பட்ட கடனுக்கு வட்டியைக் கட்டத்தான் பெத்த பிள்ளையை தத்து கொடுத்துவிட்டதாக" என்று எடுத்துக்கொள்ளலாமே. உங்கள் கண்ணோட்டம் வேறு விதம் அவ்வளவுதான்.

கலையன்பன் said...

@ Ramarao ...

படத்தின் பெயரை 'வேலைக்காரன்' என்று சுட்டிக் காட்டியதற்கு நன்றி சார்!

தாங்கள் கூறிய கருத்தும் ஏற்புடையதே! உங்கள் கண்ணோட்டமும் மிகப் பொருத்தமே!

கருத்திட்டமைக்கு நன்றி சார்!

Anonymous said...

வணக்கம்

பாடலுக்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கலையன்பன் said...

@ 2008rupan ...

வாங்க...
வருகைக்கு நன்றி! கருத்தை பதிவு செய்தமைக்கும்
மிக்க நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...