Saturday, January 15, 2011

ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்!

அனைவருக்கும் இந்த இனிய பொங்கல் திருநாளில் 
இந்த கலையன்பனின் வாழ்த்துக்கள்!


இன்றைய இந்தப் பாடல் ஜேசுதாஸ் அவர்களும் 
வாணி ஜெயராம் அவர்களும் பாடியது.




பாடல் 12 :


ஆண்: 
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்
அதுதான் காதல் பண்பாடு....
பெண்:
ஓஒ ஓஒ ஓஒ ......
ஆனபின்னாலே இருபக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு....
ஆண்:
ஆரம்பக் காலம் ஒருபக்கத் தாளம்

அதுதான் காதல் பண்பாடு....

பெண்:
ஆனபின்னாலே இருபக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு....

சரணம்:
ஆண்: 
தேவாமிர்தம்ம்ம்ம்...  தேனிதழ்கள்ள்ள்ள்....
தேவர்கள் இல்லை நான் வந்தேன்...
பெண்:
மாண்பின் நகரம்ம்ம்ம்... குன்றங்கள்ள்ள்ள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...
ஆண்: 

தேவாமிர்தம்...  தேனிதழ்கள்....
தேவர்கள் இல்லை நான் வந்தேன்...
பெண்:
மாண்பின் நகரம் ... குன்றங்கள்...
மலர்கள் இல்லை நான் வந்தேன்...

-இப்படி இந்தப் பாடல் தொடர்கின்றது. நல்ல  மெலோடியான பாடல்.
அனேகமாக  இப்பாடல் கே.பாலச்சந்தர் படத்தில் இடம் பெற்றிருக்கலாம்
என்று எண்ணுகிறேன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையாயிருக்கலாம்.
ஆனால், உறுதியாக சொல்ல இயலாது. 
இந்தப் பாடல் பற்றிய மற்ற விவரங்கள் தெரிந்தவர்கள்
அவசியம் உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள். 

இந்தப் பாடல்பற்றிய, இந்த இடுகைபற்றிய உங்கள் கருத்துக்களை
எதிபார்க்கிறேன்.
!




10 comments:

ம.தி.சுதா said...

இப்பாடலை சரியாக நான் கேட்டதில்லை அனால் வரிகள் நல்லாயிருக்கு... பகிர்வுக்கு மிக்க நன்றி...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

'பரிவை' சே.குமார் said...

இப்பாடலை நான் கேட்டதில்லை. பகிர்வுக்கு நன்றி.

கலையன்பன் said...

@ ம.தி.சுதா ...

ஆமாம் ம.தி.சுதா! பாடல் வரிகளும் நல்லாயிருக்கும்;
ட்யூனும் மிக இனிமையாயிருக்கும். எனக்குப் பிடித்த
பாடல்களுள் இதுவும் ஒன்றாகும்.
கருத்திற்கு நன்றி!

கலையன்பன் said...

@ சே.குமார் ...

வருகை தந்ததற்கும் கருத்து தந்ததற்கும்
நன்றி சே.குமார்!!

Unknown said...

ஆரம்ப காலம் ஒரு பக்க தாளம், ஆன பின்னாலே இருபக்க இடி...
இப்படித்தான் இங்கே பலருக்கு மாறி விடுகிறது.
நல்ல பாடல், பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.
கலையன்பனுக்கு எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

தமிழ்மண ஓட்டுப்பட்டையையும் இணைக்கவும்.அது இன்னும் சில ரசனைமிக்க பதிவர்களை உங்கள் வலைப்பூ வரை வர வைக்கும்.

கலையன்பன் said...

@ பாரத்... பாரதி...

ஆமாம், பாரத் பாரதி! திரையில் காதலர்கள்
பாடுவதால் அது இனிய சொற்களால்,
கருத்துக்களால் இசைக்கப்பட்டிருக்கின்றது.
நிஜத்தின் நிகழ்வில் தங்கள் கூற்றுப்படிதான்
காணக்கிடைக்கின்றது. நல்ல கருத்து!
தங்கள் வாழ்த்திற்கு நன்றி!

கலையன்பன் said...

@ பாரத்... பாரதி...

நல்லது - தமிழ்மணம் (திரைமணம்) ஓட்டுப்
பட்டையும் இணைக்கலாம்; செய்கிறேன்.
ஆலோசனைக்கு நன்றி பாரத் பாரதி!

"ராஜா" said...

இந்த பாடலை இதுவரை கேட்டது போல் இல்லை ....பாடலை எழுதியது யார் நண்பரே ஒரு பக்க தாளம் இருபக்க மேளம் என்று வரிகள் அருமை

கலையன்பன் said...

@ "ராஜா" ...
'வாருங்கள், ராஜாவே!' (சுஜாதா நாவல் தலைப்பு இது!)
என்னுடைய ஊகம் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர்
கவியரசர் கண்ணதாசன் என்று! தாங்கள் சொன்னதுபோல்
கவிமயமான வரிகள்தான்!
கருத்திற்கு நன்றி, ராஜா!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...